முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 565 |
Untitled Document
1. தென் திருப்பேரை அபிநவ காளமேகம் அனந்தகிருஷ்ண ஐயங்கார் |
தேசிகவி நாயகனாஞ் சீரியனை நாஞ்சிற்சு தேசிகவி நாயகனாத் தேர்ந்துகந்தேன் - காசினியில் வாடலுறா தென்றும் மணக்கும் மலர்மாலைப் பாடல் முழுவதுமே பார்த்து. |
பூவிரி தடம்பூஞ் சோலை பொருந்து புத்தேரி நின்று கோவினார் தங்கு மாடக் குமரியில் வந்து வாழும் காவியம் கண்ணால் நோக்கிக் களித்திடு வாணி யான தேவியைப் பாபர்ப்பா னிங்கு சேர்ந்திடும் பார்ப்பான் யானே |
(இப்பாடல் மகாவித்துவான் அபிநவகாளமேகம் பிரம்மஸ்ரீ அனந்த கிருஷ்ண அய்யங்கார் அவர்கள்கன்னியாகுமரிக்குத்தே.வி.யைத்தரிசிக்க வந்தபோது பாடியது - கை.எ.பி.) |
2. வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் |
மற்றைக் கவிகளெல்லாம் வன்கற்கள் போல்வார் இவ் வொற்றைக் கவிமணியை ஒப்பனென்றோர் வுற்றுக் கவியரசாம் தேசிக விநாயக கத்தைக் கவிமணியென் றார்கற்றார் கள். வாழிபல ஊழி மலர்மாலையாம் தொகைநூல் வாழிமரு மக்கள் வழி மான்மியநூல் - வாழியரோ தேசிக விநாயகன்தன் சேயாம் சிவனருளால் தேசிக விநாயகவேந் தே. | |
|
|