பக்கம் எண் :

564கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1820 சேவற் கொடியோன்
     ‘கலைமகள்’ ஜனவரி 1952. மூலத்தில் ராகதாளம் இல்லை. முந்திய
தலைப்பு           ‘வந்தனை செய்வோம்’ என்பது. இக்கீர்த்தனையில்
குறிப்பிடப்படும் ‘வடகுமரை’ சேலம்    ஜில்லாவில் உள்ள ஒரு ஸ்தலம்
என்ற குறிப்பு உள்ளது.

1821 அரங்கன்
     ‘கலைமகள்’ 1952. முந்திய தலைப்பு ‘இரங்கியருள்’

1822 பாடிப் பணிவோம்
     ‘கலைமகள்’ - செப்டம்பர் 1952 - மூலத்தில் ராக தாளம் இல்லை.
முருகன் படம் உண்டு. படம்   வரைந்தவர் கங்கா. இக்கீர்த்தனையுடன்
கவிமணி உடல் நலமின்றி   படுத்துக்கிடக்கிறார். இவரது கீர்த்தனைகள்
இசை அரங்குகளில் பாட்டாக்கப்படுகிறது என்றகுறிப்பு உள்ளது.மேலும்
இக்கீர்த்தனையில்     வரும் ‘வடகுமரை’ என்ற இடம் பற்றிய குறிப்பு
உள்ளது. இதுசேலம் ஜில்லாவில்உள்ளஊர். அங்குள்ள ஸ்ரீ அப்பண்ண
ஸ்வாமிகள் என்ற பெரியாரின்    விருப்பத்தின்படி பாடியது இது என
உள்ளது.

1823 வாடி நீ வருந்துவதேன்
     ‘கலைமகள்’ பொங்கல் மலர் (தை) ஜனவரி 1953. (நந்தனவருஷம்). மூலத்தில் ராகதாளம் உள்ளது. இதற்குப் படம் வரைந்தவர் சுப்பு.

1824 குமரிப் பகவதி
     ‘கலைமகள்’ தீபவாளி மலர் 1959.   மூலத்தில் ராக தாளம் உண்டு.
இதன் முந்திய தலைப்பு “ஒருவரம்”, இந்தக் கீர்த்தனை கவிமணி இறந்த
பின்னர் வந்துள்ளது. எனவே,        இதற்கு முன் இது 1950 அளவில்
‘கலைமகளில்’ வந்திருக்க வேண்டும்.

1825 அஞ்சாதே
     ‘கலைமகள்’
     முந்திய தலைப்பு ‘நிழலும் ஒளியும்’ என்பது. (கை.எ.பி.)

1826 மன்னித்தருள்வாய்
     ‘கலைமகள்’; மூலத்தில் ராக தாளம் அமைத்தவர் பெயர் ஸ்ரீ.கே.சி.
தியாகராஜன் என உள்ளது.

1827 பாதாரவிந்தம் பணிந்தேன்
     இந்தக் கீர்த்தனை கவிமணி நோயினால் மிகவும் தொல்லைப்பட்ட
போது இறைவனை நினைத்து பாடியது (தே.ப. பெருமாள், ‘கவிமணிமலர்’
1942, ப.24)