பக்கம் எண் :

58 கவிமணியின் கவிதைகள்

Untitled Document
383 மங்கல மாக மணமும் நடந்தது;
வாழ்க வாழ்கவே! மணமக்கள்
வாழ்க வாழ்கவே!


58. புலிக் கூடு
384 பந்தம் எரியுதோடி! - கண்களைப்
பார்க்க நடுங்குதடி!
குந்தம்வாள் ஈட்டியெல்லாம் - கூடவே
கொண்டு திரியுதடி!

385 வாயைப் பிளக்குதடி! - கையுறை
வாளும் உருவுதடி!
பேயைப் படைத்தபின்னோ - இதனையும்
பிரமன் படைத்தான் அடி!

386 வாலை முறக்குது பார் - வால்நுனி
வட்டஞ் சுழலுது பார்;
சாலப் பதுங்குது பார் - நம்மீது
சாடவும் நோக்குது பார்!

387 இடித்து முழங்குதடி! - தொண்டையும்
இரும்பாலே செய்ததோடி!
அடுத்து நெருங்காதேடி! - அதுமிக
ஆங்காரம் கொள்ளுதடி!

388 கூட்டில் அடைத்திடினும் - இரையினைக்
கொண்டு கொடுத்திடினும்
காட்டில் வளர்ந்த குணம் - புலிகளும்
காட்டா திருக்குமோடி!

389 புன்னைப் புதுமலரும் - குவளையின்
பூவுங் கலந்ததுபோல்,
மின்னி மிளிரும் உடல் - கொடியஇவ்
வேங்கைக்கும் வேண்டுமோடி!

390 மானைப் படைத்த தெய்வம் - புலியையும்
வளர்த்து விடலாமோடி?
தேனைப் பழித்த சொல்லாய்! - எனக்கு நீ