முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 59 |
Untitled Document | | கதைப்பாட்டுகள் (5) | | | 59. ஊகமுள்ள காகம் | 391 | | தண்ணீர் கிடையாமல் - காகமொன்று தவித்த லைகையிலே, மண்ணாற் செய்தஒரு - சாடியினை வழியிற் கண்டதம்மா! |
392 | | சாடியின் மீதிருந்து - தலையைச் சரித்து நோக்கிடவே, சாடியிலே தூரில் - சற்றே தண்ணீர் தெரிந்ததம்மா! |
393 | | காகம் உடன்எழுந்து - சிறுசிறு கற்கள் பொறுக்கிவந்து, ஊகமாய்ச் சாடியினுள் - அவற்றை ஒவ்வொன்றாய் இட்டதம்மா! |
394 | | இட்டிட வேநீரும் - மேலே யெழுந்து வந்ததம்மா! சட்டமாகக் குடித்துக் - காகம் தளர்ச்சி தீர்ந்ததம்மா! |
395 | | ஊக்க முடையவர்க்குத் - துன்பம் உலகில் இல்லை அம்மா; ஆக்கம் பெருகும் அம்மா! - இதை நீ அறியவேண்டும் அம்மா! |
| | 60. நெற்பானையும் எலியும் | 396 | | பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப் பானை ஒருபுறம் ஓட்டையடா! ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்துநெல் தின்றதடா! |
397 | | உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று - வயிறு ஊதிப் புடைத்துப் பருத்ததடா! மெள்ள வெளியில் வருவதற்கும் - ஓட்டை மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா! | |
|
|