1876 | ஜூலை 27 (மலையாள ஆண்டு 1050 ஆடிமாதம் 14 ஆம் நாள் தாதுவருஷம்; ஆயில்ய நட்சத்திரம்) கவிமணி பிறப்பு. தந்தை, தேரூர் சிவதாணுபிள்ளை; தாய், தாமரைகுளம் மாணிக்கவாசகம் பிள்ளையின் இரண்டாம் மகள் ஆதிலெட்சுமி. |
1881 | தேரூரில் ஆரம்பக்கல்வி; முதலில் படித்தது மலையாளம். |
1885 | தந்தை சிவதாணுபிள்ளை மறைவு. |
1888 | தேரூர் சுடலைமாடன் கோவிலில் பலியைக் கண்டு ‘நாடியறம்...’ என்ற பாடலைப் பாடியது. |
1886-89 | தேரூர் வாணந்திட்டு திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றல். |
1887 | கோட்டாறு அரசுப் பள்ளியில் படிப்பு (இந்தப் பள்ளி இப்போது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைநினைவு மேல்நிலைப் பள்ளிமற்றும், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் எனப்படுகிறது) |
1893 | எப்.எ. படிப்பு; திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில பயிற்சி. திருநெல்வேலி உமையொருபாகக் குருக்கள் கோட்டாறு ஊரில் வைத்து சிவதீட்சை கொடுத்தல். |
1901 | புத்தேரி குற்றாலம் பிள்ளையின் மகள் உமையம்மாளைத் திருமணம் செய்தல். கோட்டாறு அரசு ஆரம்பப் பள்ளியில்ஆசிரியர்பணி இதே பள்ளியில் ஆசிரியர்பயிற்சி பள்ளியின் அறிவியல்ஆசிரியர்பணி. |
1902 | திருவனந்தபுரம், மகளிர்ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியார் பணி. |
1904 | திருவனந்தபுரம் மகராஜா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி |
1905 | திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள்கல்லூரிதமிழ் விரிவுரையாளர் பணி. ‘சுங்காங்கடையில் கோட்டை’, என்னும்ஆய்வுக்கட்டுரைஎழுதுதல். |
1905-1910 கல்வெட்டு வரலாறு தொடர்பாக ஆழ்ந்த படிப்பு |