| “Kerala Society Papers,” “Travancore Times”, ‘தமிழன் போன்ற இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல்;தமிழகத்தில் சில இதழ்களில் குழந்தைப் பாடல்கள் வெளிவரல். |
1917- 1918 | ‘தமிழன்’ பத்திரிகையில்‘மருமக்கள் வழிமான்மியம்’வெளிவருதல் |
1922 -23 | நாஞ்சில் நாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள் சிறுபிரசுரத்தை வெளியிடுதல். வையாபுரிப் பிள்ளையுடன் தொடர்பு ஏற்படல் |
1922 | மார்ச் 11 வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த மனோன்மணியம் பதிப்புக்கு உதவுதல். |
| திராவிடன் (சென்னை) தினப்பத்திரிகையில்“மனோன்மணியத்தின் மறுபிறப்பு” கட்டுரை வெளி வரல். |
1920- 30 | திருவனந்தபுரத்தில் நீதிபதி கே.ஜீ. சேக்ஷையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, இசையரசுலட்சுமண பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை, ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியர் முத்துசாமிப்பிள்ளை ஆகியோருடன் இலக்கியம், தமிழகவரலாறு குறித்து தொடர்ந்து உரையாடுதல். மதுரை தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு : திருவனந்தபுரம்சைவப் பிரகாச சபையில் திருக்குறள் ஆராய்ச்சி செய்தல். |
1926 | அழகியபாண்டியபுரம் பெரியவீட்டு முதலியார்வீட்டிலிருந்து முதலியார் ஓலைச் சுவடிகளை அடையாளம் காணுதல். |
1930 | வழக்குரைஞர் பி. சிதம்பரம்பிள்ளை மூலம் முதலியார் ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்தல். |
| முதலியார் ஓலைச் சுவடிகள் பற்றி Kerala Society Papers இதழில் பெரிய கட்டுரை வெளியிடுதல். |
| ராஜாகேசவதாஸ் பற்றிய “திவான்வெற்றி” என்னும் கதைப் பாடலின் ஏட்டுச்சுவடியை டி.கே. ஜோசப்பின்உதவியுடன் பிரதி செய்தல்.(பின்னர் 1943 அளவில் இது திருவிதாங்கூர்அரசால் வெளியிடப்பட்டது) |
1931 | ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறுதல்.நாகர்கோவிலுக்கு வடக்கேயுள்ள புத்தேரி என்ற கிராமத்தில் தங்குதல்தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திலும், கதரியக்கத்திலும் ஈடுபட்டுத் தொண்டர்கள் பாடுவதற்கென்றே நாட்டார் சந்தங்களில் பல பாடல்களைஇயற்றல். |
1932 | ஸ்ரீ வைகுண்டம் சுப்பிரமணிய பிள்ளை, என்பவர் சிவகாமி வெளியீட்டகம் வழி கவிமணியின் கவிதைகளைத் தனித்தாளில் அச்சடித்துச் சாதாரணமாகத் தைத்துப் புத்தகமாக்கி, நண்பர்களுக்கு வழங்கல். |