பக்கம் எண் :

584கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1926-36  சென்னைப்   பல்கலைக்கழக தமிழ் லெச்சிகனின் ஆலோசகர்;
வையாபுரிப் பிள்ளையின்  வேண்டுகோள்படி நாஞ்சில் நாட்டுப்
பேச்சுவழக்குச் சொற்களைத் தொகுத்துலெக்சிகனுக்குஅளித்தல்.
வையாபுரிப் பிள்ளையின் பதிப்பு முயற்சிக்கு உதவுதல்.
1936 ‘காந்தளூர்ச்சாலை’          கட்டுரை பின்னிணைப்புகளுடன்
சிறுபிரசுரமாக வெளிவரல்.
1938  மு. அருணாசலத்தின்       முயற்சியில் காரைக்குடி புதுமைப்
பதிப்பகத்தாரின்    வெளியீடாக ‘மலரும் மாலையும்’ தொகுதி
வெளிவரல்.
1940  டிசம்பர் 24 சென்னைபச்சையப்பா  கல்லூரியில் வைத்துநடந்த,
சென்னை மாகாண ஏழாம்தமிழ் மாநாட்டில்,உமாமகேஸ்வரனார்,
தேசிகவிநாயகம் பிள்ளைக்குக் ‘கவிமணி’என்றபட்டம்கொடுத்தல்.
1941  ஏப்ரல் ‘இளந்தென்றல்’       (குழந்தைப் பாடல்கள்) என்னும்
தலைப்பில் ஒரு         தொகுதியைக்  காரைக்குடி புதுமைப்
பதிப்பகத்தார்        வெளியிடல்.ஸ்டார்  பிரசுரம், ‘தேவியின்
கவிக்கனிகள்’ என்னும் தொகுப்பை வெளியிடல். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்ப்      பாடத்திட்டக்குழு உறுப்பினராக நியமனம் பெறுதல்.
1942  புதுமைப்       பதிப்பகத்தார் ‘மருமக்கள் வழி மான்மியத்’தை
வெளியிடுதல்.
1943 மே 11 நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆத்தங்குடியில் பாராட்டுக்
கொடுத்தல்.
1943  மே 12 ராஜா       சர் அண்ணாமலை செட்டியார் வெள்ளிப்
பாத்திரங்கள் கொடுத்து உபசரித்தல்.
1944  செப்டம்பர் 11 மதுரையில் பாரதியின்நினைவுக் கட்டிடம்திறத்தல்.
1944  செப்டம்பர் 26 திருநெல்வேலியில் பாராட்டுப் பெறுதல்
1945  நாகர்கோவிலில் 70  விழா பாராட்டு;‘கவிமணிமலர்’வெளியிடுதல்;
கவியோகி ஸ்ரீ சுத்தானந்த   பாரதியார் கவிமணியின் வாழ்க்கை
வரலாற்றை முதல் முதலாகத் தொகுத்து வெளியிடுதல்.
1945 கோட்டாறு கவிக்குயில்  பதிப்பத்தார் உமர் கய்யாம்பாடல்களை
ஒரே தொகுப்பதாக வெளியிடுதல்.
1947  அருள் நிலையத்தார், ஆசியஜோதி  பாடல்களை ‘காதல் பிறந்த
கதை’ என்ற தலைப்பில்      வெளியிடுதல்.  சென்னை அரசு,
பாரதியின்பாடல்களில் பாடபேதங்களைப்பரிந்துரைக்கும்குழுவில்
உறுப்பினராக  நியமித்தல்.
1948 செ. சதாசிவன் பிள்ளையின்       ‘கவிமணி வரலாறு’ வெளி
வருதல்.