1948 | மே 14 நாகர்கோவிலில் நடந்த மூன்றாம் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தல். |
1950 | ஜனவரி 6 கன்னியாகுமரியில் நடந்த தென்குமரி எல்லை மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தல். |
1950 | அக்டோபர் - நாகர்கோவிலில் ஆர்.கே. சண்முகம் செட்டியால் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாராட்டுப் பெறுதல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக அமர வேண்டிஅழைத்தல் |
1950 | டிசம்பர் 5 நாகர்கோவிலில், திருவாவடுதுறை மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பாராட்டுதல். |
1951 | கவிமணியின் பாடல்களைப் பாரிநிலையம் வெளியிடப் பதிப்புரிமை பெறுதல். |
| திருவிதாங்கூரில் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக இந்தி மொழி புகுத்தப்பட்ட போது நாகர்கோவிலில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவித்து, அரசுக்கு அறிக்கை அனுப்புதல். |
1952 | மே கவிமணி பிறந்த தேரூரில் ஊர்மக்கள் நினைவுச்சின்னம் அமைத்தல். |
| பாரி நிலையம், ‘கவிமணியின் உரைமணி’களை வெளியிடுதல். கவிமணியின் பெயரால் நாகர்கோவிலில், நூல் நிலையம் நிறுவப்படல். |
1953 | ஜு லை பாரி நிலையம் ‘தே.வி.யின் கீர்த்தனங்கள்’ நூலை வெளியிடுதல். |
| நாஞ்சில் நாட்டு, கடுக்கரை மணியங்கரம் மாநாட்டில் பங்கு பெறுதல். கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம், கவிமணி விழாவைக் கொண்டாடுதல்; மலர் வெளியிடுதல். |
1954 | ‘மலரும் மாலையும்’ செம்பதிப்பு வெளிவருதல். மு. சண்முகம் பிள்ளையின் பெரு முயற்சியால் இப்பதிப்பு உருவாக்கப்படல். கவிமணியின் கடைசிக் கட்டுரை ‘வருங்கால அரசியல் மொழி’ ‘கலைக்கதிர்’ இதழில் வெளிவருதல். |
1954 | செப்டம்பர் 26 ஞாயிறு பகல்(மலையாள ஆண்டு 1130 புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி மகாளய அமாவாசை) மறைவு; அடக்கம் அன்று இரவு 2.30 மணிக்கு. |
1976 | ஜு லை 27-நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் நிகழ்தல். |
1999 | கவிமணியின் நூற்கள் அரசுடைமை ஆக்கப்படுதல் |