பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு73

Untitled Document
உயிரிழந் தீரோ? உறங்குகின் றீரோ?
ஐம்பொறி கெட்டென் அறிவும் ஓய்ந்திட
ஐவரும் குளத்தில் ஆழ்ந்து போனீரோ?

ஒருகுலைக் காயும் ஒன்றாய் உதிர்ந்ததோ.
வஞ்சனை! வஞ்சனை! மாடம் பிகளும்
எட்டுவீட் டாரும் இயற்றி வஞ்சனை!
இரக்கம் சிறிதும் இல்லா அரக்கர்!
'கொட்டாரம்' தீக் கொளுத்திய நீசர்!
மாமன் ஆதித்த வர்மனை விஷத்தால்
மாளச் செய்தமா பாதகர்! ஐயோ!

நாடும் இவரால் காடாய் விட்டதே!
புலிசூழ் வனத் தொரு புல்வாய் ஆனேன்.
நாடிருந் தென்ன? நகரிருந் தென்ன!
அணிதேர் புரவி ஆளிருந் தென்ன?
உண்மையில் உற்றார் ஒருவரும் இல்லை, இன்று
எவரும் துணையிலா ஏழையாய் நின்றேன்.
எமன்வாய்த் தவறிய இவ்வொரு மகற்காய்
உயிர்கொண்டிருந்தேன்; உயிர்கொண்டிருந்தேன்;
கொடியர்! கொடியர்! அறவே கொடியர்!
ஏதும் ஒருதயை இலாச்சண்டாளர்!
பச்சைப் பசலைகள் பாலகர் என் செய்தார்?
நினைக்கும் போதென் நெஞ்சில் மூள்தீ;
ஐயோ! ஐயோ! அறையற் பாலதோ!
பதும நாபா! பாற்கடல் வாசா!
அரவணை மேல்கண் அயர்ந்தே போனையோ!
துரியோ தனர்க்கும்துணையாய் விட்டையோ!
எட்டுவீட் டாதி இராட்சசப் பேய்காள்!
என்மனம் சுடம்இவ் வெரிப்போய் உங்கள்
சுற்றமும் குலமும் சுடும்சுடும். மேலுமிவ்
வினைத்திரள் எல்லாம் வேல்திர ளாய்உம்
மனத்தில் ஊடுருவி வாட்டுதல் திடமே.