பக்கம் எண் :

72கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பெருமைதரு மாபிருந்தா வனத்தில் இன்றுவர்,
     பேறுபல பெற்றிடவே கூடி நின்றார்;
அருமறைக்கும் எட்டாத ஆதிநாதன்,
     அரையாமத் தன்புநதிக் கரையில் வந்து,
கருதரிய கண்காட்சி தருவான்; சற்றும்
     கலங்காம லிருப்பாய்என் ஏழை நெஞ்சே!

14
     (பாட்டு  முடியவும்   கதவு திறக்கிறது.     கண்ணனைத்
துதித்துக்கொண்டு மீரா      அங்கே இருந்து வருகிறாள். அள்
பிரிவினால் சித்தோர் ராஜ்யம்    க்ஷீணமடைந்தது எனக் கருதி
ராணா அவளை அழைத்து வருமாறு பக்தர்களை அனுப்புகிறான்.
அவள் திரும்பிச்          செல்ல மனமின்றி, தன்னை ஏற்றுக்
கொள்ளும்படி கண்ணனை வேண்டுகிறாள்:)

வேறு
456 என்றும் எனைநீ ஏற்றுக்கொள்;
     எனக்குத் துணைவே றெவருமில்லை;
கன்று பசியும் எனக்கில்லை;
     கண்ணில் உறக்கம் சிறிதுமில்லை;
துன்றும் உடலும் குறுகி, ஒரு
     துரும்பாய்த் தேய்தல் கண்டிலையோ?
நன்று தருவாய்; எனைத்தேடி,
     நடுவிற் பிரியா தருள்வாயே.

15
     (விக்கிரகம் இரண்டாய்ப் பிளந்து,    மீராவைத் தன்னுள்
அடக்கிக் கொண்டது.     இவ்வாறு மீரா தன் அறுபத்தேழாம்
வயதில் பரமபதம் அடைந்தாள்.)

64. ஓர் இராணியின் சாபம்
457 மக்கள்! மக்கள்! வளர்த்தபைங் கிளிகாள்!
வஞ்சி நாடாள வந்த மகிபர்காள்!
பாவியென் மடியும் பக்கமும் இருந்தீர்!
இக்கண மன்றோ இறங்கிச் சென்றீர்!
எமனும் இதற்குள் எங்கிருந் திறங்கினன்?