பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு71

Untitled Document
சித்தோருக்குத் திரும்பினாள். பத்து வருஷகாலம் போஜராஜன்
அவளோடு கூடி இல்லறம் நடத்தினான்; பின்னர் ஒரு சமயம்
அவன் போருக்குச் சென்ற விடத்து, போரில் உயிர் துறந்தான்.
அவன் தம்பி உதய சிம்மன் ராணாவானான். அவன், மீராவின்
விஷ்ணு பக்தியைக்       கண்டு வெறுப்படைந்து; அவளைக்
கொல்ல முயன்றான். அவன் செய்த முயற்சிகள்    பயனற்றுப்
போகின்றன. அவன் தன்னைக்       கொல்ல முயன்றதையும்
கிரிதரனுடைய கருணையையும் நினைத்து மீரா    பாடுகிறாள்:)

453 தணியா அரவின் கூடையொரு
     சாளக் கிராமம் ஆயிடுமே!
அணியார் கிண்ணத் தருநஞ்சும்!
     அமுதாய் இனிமை தந்திடுமே!
திணியார் சூலப் படையுமலர்ச்
     சேக்கை யாக மாறிடுமே!
மணியார் வண்ணன் அடியருளம்
     மலையா தென்றும் காப்பானே.

13

     (மறுபடியும் நாட்டைவிட்டுச்      சென்றமீரா இறுதியில்
பிருந்தாவனத்துக்கு வந்து சேர்கிறாள்.     அங்குள்ள பழைய
கண்ணன் கோயில் அடைத்துக் கிடக்கிறது.    அதைத்திறக்கச்
செய்ய ஒருவராலும் இயலவில்லை. மீராவே அது  திறக்கும்படி
பாடவல்லவள்         என்பதை யுணர்ந்த ஒருவர் அவளைக்
கோயிலுக்கு அழைத்துச் செல்ல, அவள்  அங்கே பாடுகிறாள்:)

454
வேறு

ஆளடிமை யாகஎனை அமர்த்திக் கொள்வாய்;
     அழகாக நந்தவன வேலை செய்வேன்;
நாள்விடிய எழுந்துன்னை நமஸ்க ரிப்பேன்;
     நலமிகவே நின்கதைகள் பாடிநிற்பேன்;
மீள்கூலி யாயுனது காட்சி போதும்,
     மேற்செலவுக் குன்நாம செபமே போதும்;
நீள்செல்வம் பத்தியலால் வேறொன் றில்லை;
     நித்தியனே! நின்மலனே! நிகரில்லோனே!

455 பொருவரிய யோகியர், மா தவத்தின் மிக்கோர்,
     புள்ளுயர்த்தோன் அடிமறவாப் பத்திச் செல்