Untitled Document
450 | | இரவுபகல் எப்பொழுதும் உன்னைக் காணாது, இருக்கமனம் வருவதில்லை; ஐயா! நீதான் வரும்வழியில் முகம்வைத்து, மேடை நின்று, மாலையாய்க் கண்ணீரும் வடித்து நிற்பேன், 'உரியகுலம் குடியாவும் மாயை' என்னும் உண்மையினை உள்ளபடி உணர்ந்து கொண்டேன்; குருமொழியில் மனப்பேயை அடக்கி, உன்றன் குரைகழலே தஞ்சமெனக் கும்பிட்டேனே. |
451 | | கண்ணுமுனைக் காணாமல் கலக்கங் கொள்ளும்; கணமேனும் உள்ளத்தில் அமைதி யில்லை; உண்ணுதற்கும் பசியில்லை; உறக்க மில்லை; ஓரிரா ஓர்யுகமாய்க் கழியுது; ஐயா! நண்ணிஎனை வாள்போல அறுக்கும் இந்த நலிவையெலாம் யாவரிடம் சொல்லி நிற்பேன்? எண்ணிஎண்ணி நைந்துருகும் என்னை யாள, எந்நாளிங் கெழுந்தருள்வாய்? எம்பிரானே! |
| | (ஒரு முறை சமாதி நிலையில் கண்ணனுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றபோது பாடுகிறாள்:) |
452 | | கார்முகிலின் மேனிபெறும் நந்தகுமரா! - என்றன் கண்களிலே குடியிருப்பாய்; நந்தகுமரா! மார்பினிலே வைஜயந்தி மாலையணியும் - உன்றன் வடிவினிலே மயங்கிநின்றேன்; நந்தகுமரா! ஆரமுத மூறுமிதழ் மீதிலமரும் - குழல் அழகினுக்கோர் அளவுமுண்டோ? நந்தகுமரா! சேருமணி யாடரைஞாண் பாதசதங்கை - ஒலி செய்திடவே வந்தருள்வாய்; நந்தகுமரா! பாரும் விண்ணும் பணிந்து தொழும் நந்தகுமரா! - என்றும் பத்தரையாள் ஈசன்நீயே! நந்தகுமரா! |
| | (சமாதியில் கண்ட கண்ணன் திருமுகம் மீராவுக்கு தன் கணவனை ஞாபகப்படுத்திற்று. அப்பொழுதே தன் கடமையை உணர்ந்து, | |
|
|