பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு69

Untitled Document
447   எத்திசையும் மேகங்கள் எழுந்து மின்னி,
     இடிமுழங்கிப் பெருமழையும் பெய்யக்கண்டோம்;
தத்திவரும் குளிர்வாடை வீசக்கண்டோம்;
     தவளையொடுசாதகமும் கத்தக் கண்டோம்;
சித்தமகிழ் பூங்குயிலும் கூவக் கண்டோம்;
     ஸ்ரீநந்த குமரன்வர இன்னுங் காணோம் ;
பத்தியொடு பணிகின்றேன் ; கிரித ரா ! உன்
     பாதமலால் வேறுதுணை அறியேன் ; ஐயா !

     (மீரா காட்டுவழியே சென்று தந்தையின்  இல்லமடைந்து,
அங்கிருந்து தீர்த்த யாத்திரை செல்கிறாள். கூர்ஜர   தேசத்தில்
சாது ரவிதாசரைக் கண்டு  பணிகிறாள். கணவனை வழிபடுமாறு
அவர் கூறிய அறிவுரைகளை     அவள் ஏற்கவில்லை. அவர்
முன்னிலையில் மீரா பகவானைத் துதிக்கிறாள்:)

448   காசியிலே இறப்பதனால் பயனொன்று இல்லை ;
     காஷாயம் தரிப்பதொரு வேஷ மேயாம் ;
ஆசையினை வேருடனே அறுக்க வேண்டும் ;
     அழியுமுடல் அபிமானம் அகற்ற வேண்டும் ;
பேசுலகில் அழியாத பொருளொன்று இல்லை ;
     பெரியவர்க்கும் சிறியவர்க்கும் மரணம் ஒன்றே ;
பாசமுறு சம்சாரம், அந்தி யோடு
     பறந்தகலும் பறவைவிளை யாட்டை யாமால்,

449   முத்திநெறி நாடாது, யோகி யாகி
     மூச்சடக்கி இருப்போர்கள், பின்னும் பின்னும்
இத்தரையில் வந்துபிறந்து இறத்தல் திண்ணம்;
     இவ்வுண்மை எந்நாளும் பொய்ப்ப தில்லை;
பத்தியொடு கைகூப்பிப் பணிகின் றேன்; உன்
     பாதமலால் வேறுதுணை யொன்றும் இல்லை;
நித்தியனே! யமபாசம் அண்டாது, என்னை
     நீஆண்டு காத்தருள வேண்டும்; ஐயா!

 
10

     (ரவிதாசர் அவள் பாடிய பாடலின் கருத்தை   அவளுக்கு
விளக்கிக் கூறி, ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதே கடமை என்று
மீண்டும் போதிக்கிறார். அவள் அதை உணர்ந்தும், அவள் மனம்
சம்சாரபந்தத்தில் கட்டுப்படவில்லை.     கண்ணனுடைய பிரிவை
எண்ணி வருந்திப் பலமுறை பாடுகிறாள்:)