Untitled Document | | நம்பன் கண்ணன் அழகியவோர் நடனாய் வந்து நடிக்கின்றான்; உம்பர் தொழும் அவ் வுத்தமனின் உவமை காணா உறுப்பழகுக்கு, இம்பர் எளியேன் அர்ப்பணமாய் என்னை இன்று வைத்தேனே. |
| | (இதைக் கேட்டு, போஜராஜன் கவலையிலாழ்கிறான். தேவி அவன் கனவிலே தோன்றி, காலக்கிரமத்தில் மீரா அவனிடம் அன்புடையவளாவாளென்றும்; அதுவரையில் பொறுத்திருக்க வேண்டுமென்றும் கூறுகிறாள். அவன் ஒருவாறு தேறி, தானும் விஷ்ணு சேவையில் ஈடுபடுகிறான். இடையில், மீரா மதுயாமினி விரதத்தை மேற்கொண்டு தெருக்களில் பஜனை செய்யத் தீர்மானிக்கிறாள். அவள் மைத்துனியாகிய ஊதாபாய் வெகுண்டு தடுத்தும் மீரா கேட்காமல் உறுதியாயிருந்து பாடுகிறாள்:) |
445 | | என்றுமே கிரிதரனை யன்றி, வேறிங்கு ஏதுமொரு துணையறியேன்; எழுந்து முன்னம் குன்றுயர்த்த கோமானே வணங்குந் தெய்வம், குலப்பெருமை குடிப்பெருமை எல்லாம் விட்டேன்; நன்றுதருந் திருக்கூட்டம் நாடிச் சார்ந்தேன்; நாணிழந்தேன்; எவரையும் நான் மதிக்க மாட்டேன்; துன்று கண்ணீர் விட்டு, அன்புக் கொடிவளர்த்தேன்; சுகமென்னுங் கனியையது தந்தது; அம்மா! |
446 | | பத்தரெலாம் இதுகண்டு மனம கிழ்ந்தார்; பாமரரே அறியாது வருந்தி நின்றார்; நித்தமுமே மீராநின் அடிமை யானாள்; நீஅவளை ஆண்டருள வேண்டும்; ஐயா! அத்தியிடர் காத்தபெருங் கருணை யாளா! அரவணைமேல் துயில்கொள்ளும் ஆதி நாதா! சித்தமிசை குடிகொண்ட ஞான ரூபா! தேவகியின் திருமைந்தா! தேவ தேவா! |
| | (மீராவின் செயல்களால் வெறுப்புற்ற போஜராஜன் அவளை நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறான். காட்டின் வழியே மீரா பாடிக் கொண்டு செல்கிறாள்:) | |
|
|