பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு67

Untitled Document
  இதமுறவே என்மீதில் இரங்கி, நீஇவ்
     இராஜவிருந் துண்டருள வேண்டும்; ஐயா!
பதமலரை முடியணிந்து பணிந்து நின்றேன்;
     பகவானே! கிரிதரனே! பாரில் என்றும்
சதமெனவே நம்பிவரும் அடியா ருள்ளம்
     சலியாது காத்தாளும் தேவ தேவே!

6

     (விக்கிரகம் உண்ணாதிருப்பதைக்     கண்டு மீரா வருந்தி
மெய் சோர்ந்து கிடக்க, விக்கிரகம்     பிறகு நைவேத்தியத்தை
உண்கிறது. அதைக் கண்ட மீரா   ஆனந்தமாய் விக்கிரகத்தோடு
பேசி விளையாடிக்         கொண்டிருக்கிறாள். இதைக் கண்ட
போஜராஜன் ஐயுற்று. 'யாரிடம் பேசுகிறாய்?' என்று     அவளை
வினவ அவள்     கிரிதரனே தன் நாயகன் என்று, கிரிதரனைக்
காட்டி வருணிக்கிறாள்:)

வேறு

442   நந்த குமரன் வடிவழகை
     நானும் கண்ட நாள்முதலா,
இந்த உலகம் மேலுலகம்
     இரண்டும் வேம்பே ஆனதம்மா!
முந்து மயிலின் தோகை, அவன்
     முடியின் மணிபோல் ஒளிவிடுமே;
சந்தத் திலகம், ஈரேழு
     தலமும் அடிமை கொண்டிடுமே.

443   மீனை வண்டை மானைஅவன்
     விழிகள் மறக்கச் செய்திடுமே;
கானிற் படரும் கோவையுமக்
     கனிவா யிதழைக் காட்டிடுமே;
ஈன மறுநல் மாதுளைவித்து,
     இலங்கும் பல்லுக் கிணையாமே;
யானம் மூக்குக் குவமையினை
     எங்கே கண்டு கூறுவனே!

444   அம்பொற் குழைகள்மிசையாட
     அரைஞாண்சதங்கை இசைபாட,