Untitled Document
437 | | அன்பர் படுக்கையுமவ் வாகாய மீதேயாம்; என்றன் படுக்கையுமிங்கு ஈட்டிகளின் மேலேயாம்; வன்பில் விதி எனக்கு வகுத்தவழி ஈதானால் இன்ப நலமெல்லாம் எவ்வா றடைவதம்மா! |
438 | | நீடும் மனத்துயரை நீக்கும் மருத்துவனை, நாடும் நகர்ப்புறமும் நான்கு திசையுமுள்ள காடும் மலையிடமும் கானற் பெருவெளியும் தேடி யலைந்தலுத்தேன்; தெரியநான் கண்டிலனே. |
439 | | தள்ளற் கரியாள், தமியள் இவளென்ற என் உள்ளங் கவர்ந்த ஒருவன், எதிர்நின்று வள்ளத் தமுதம் வழங்க வரினல்லால், எள்ளத் தனையும் என்துயரம் நீங்கிடுமோ? |
| | (மீராவின் துயரத்தைக் கண்ட போஜராஜன் அவள் விருப்பத்தை நிறைவேற்றக் கருதி, அரண்மனையிலேயே கிரிதாரிக்கு ஒரு கோயில் கட்டுவித்தான். கும்பாபிஷேகம் தினத்தன்று மீரா வந்து பஜனை செய்கிறாள்) |
440 | | வானெங்கும் மழையிருண்டு கவிந்தது; அன்பர் வந்தின்று மனையகத்தே தங்கு கின்றார்; ஆனசிறு சிறுதுளியாய்த் தூற்றித் தூற்றி, ஆனந்தப் பேரேரி நிறைந்தது அம்மா! ஈனமறப் பலநாளின் பிறகிந் நாளே, என்விழிகள் அவர் முகத்தைக் கண்டு அம்மா! யானுமுளம் பித்தேற இன்னும் கைவிட்டு ஏகுவரோ! என்றுமிக நடுங்கி னேனே. |
| | (ஹரிபஜனையில் ஈடுபட்டிருந்த மீரா தன் நாயகனிடம் அன்பு செலுத்த இயலவில்லை. இதனால் போஜராஜன் கவலையுற்றிருக்கிறான்.இதனிடையில், ஒரு நாள் மீரா நைவேத்தியத்தை விக்கிரகத்தின் முன் வைத்து, அதை உண்ணும்படி வேண்டுகிறாள்) |
441 | | விதம்விதமாய்ப் பண்டங்கள் செய்து வைத்தேன்; விண்ணமுத மெனக்கறிகள் சமைத்து வைத்தேன்; | |
|
|