முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 65 |
Untitled Document
431 | | வாடும் புல்லைத் தின்பதனால் மாயன் கிருபை பெறலாமேல், ஆடும் மாடும் மான்களும்அவ் அரும்பே றடைய வேண்டாவோ? |
432 | | பெண்ணின் இன்பம் துறப்பதனால் பெருமான் பாதம் பெறலாமேல், மண்ணில் எல்லா அலிகளும்அம் மாபே றடைய வேண்டாவோ? |
433 | | பாலை நிதமும் குடிப்பதனால் பரமன் அடியைப் பெறலாமேல், ஞால மீது சிசுக்களும்அந் நற்பே றடைய வேண்டாவோ? |
434 | | உண்மை யன்பை உடையவரே உலகை யளந்த பெருமானை, அண்மை யாகக் கண்டிடுவார்; அல்லார் காணார், காணாரே. |
| | (மீராவின் பாட்டிலும் அவள் அழகிலும் ஈடுபட்ட போஜராஜன் அவளை மணந்து, தன் நகருக்கு அழைத்துச் செல்கிறான். கிரிதரகோபால விக்கிரகத்தையே துணையாக உடன்கொண்டு செல்கிறாள் மீரா. சக்தி வழிபாட்டைக் குல தருமமாகவுடைய பரம்பரையில் வந்த அவளது மாமியார் மீரா செய்யும் விஷ்ணு பூஜையைப் பொறுக்காது. விக்கிரகத்தைப் பிடுங்கி எறிகிறாள். அப்போது, வருத்தத்தோடு மீரா பாடுகிறாள் | | | வேறு | 435 | | கண்ணனைக்காணாமல் காதல்கைம் மீறியது, பெண்ணின் நலமிழந்தேன், பெரும்பித்தி யாகிவிட்டேன் புண்ணைப் பொறுத்தவரும் புண்செய்தவருமல்லாமல், மண்ணில் அதன் வருத்தம் மற்றோர் அறிவாரோ? |
436 | | நஞ்சினை யுண்டு நலியு மவர்போல, விஞ்சு மதன்கொடுமை வேறெவரும் காண்பாரோ? நெஞ்சத் துயரமெலாம் நீங்க, முகில்வண்ணன் அஞ்சல் அளித்தென்ன ஆட்கொள்வ தெந்நாளோ? | |
|
|