Untitled Document 425 | | நங்கையர் கூடி நலங்கனிந்து, என்மீது குங்குமம் பூசிக் குளிர்சந் தனம்பூசி, மங்கள மாக மஞ்சள் மிகப்பூசி, அங்குநீ ராட்டக் கனாக்கண்டேன்; அம்மா! நான் |
426 | | தோரணம் நாட்டித் துழாய்மாலை தொங்கவிட்டுப் பூரண கும்பம் பொலிவாக முன்வைத்துத் தாரணி போற்றத் தகுமோர் புரோகிதர்வந்து, ஆரணம் ஓதக் கணாக்கண்டேன்; அம்மா! நான். |
427 | | செய்தற் கரிதாம் அத் திருமணப் பந்தரின்கீழ், வையம் அளந்து வளர்ந்த வடிவழகன், ஐம்பத் தாறுகோடி ஆட்கள் நடுவேஎன் கையைப் பிடிக்கக் கனாக்கண்டேன்; அம்மா! நான் |
428 | | முன்செய் தவப்பயனால் முகுந்தன் கிரிதரனே அன்பு நிறைந்திடுமென அகமுடையானாக வந்தான் இன்ப மணமும் நேற் றிரவிலே யானது அம்மா! துன்பம் ஒழிந்ததம்மா! சுகமும் பிறந்ததம்மா! |
| | (மீராவின் அழகையும் பாட்டையும் பற்றிய புகழ் நாடெங்கும் பரவிற்று.மேவாட் மகாராணாவின் மூத்த குமாரனான போஜராஜன் அவள் புகழைக் கேட்டு, அவளைப் பார்க்கவும் அவள் பாட்டைக் கேட்கவும் விரும்பி, தன் நகராகிய சித்தூரினின்றும் புறப்பட்டு, மாறுவேடத்தோடு சென்று, அவளுடைய ஹரிபஜனைக்காகக் காத்திருந்தான். எளிய உடையோடு தோன்றி மீராபாய் நந்தகுமாரன் புகழைப் பாடுகிறாள் |
| | வேறு | 429 | | நித்தம் நித்தம் நீராடில் நெடுமால் அருளைப் பெறலாமேல், தத்தும் தவளை மீன்களும்அத் தனிப்பே றடைய வேண்டாவோ? | 430 | | காயும் கனியும் அருந்துவதால் கண்ணன் கழலைப் பெறலாமேல், ஆயும் கிளைவாழ் குரங்குகளும் அப்பேறடைய வேண்டாவோ? | |
|
|