முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 63 |
Untitled Document
421 | | மாடு மேய்ப்பவனும் - என்னை மடக்கி விட்டான் என்று நாடு புகழும் ஒளவை - அன்று நாணித் தலைகுனிந்தான். |
422 | | கந்தன் முருகனே - ஒளவையின் கருவம் போக்குதற்கிவ் விந்தை செய்தானென்று - புலவர் விளம்பு கின்றாரம்மா! |
| | 63. அன்பின் வெற்றி | | | தமிழ் நாட்டிலுள்ள ஆண்டாள் சரித்திரம் போலவே வட நாட்டிலே மீராபாய் என்னும் பக்தையின் சரித்திரம் வழங்கி வருகிறது. ஆண்டாள் பாடிய பாசுரங்களை யொப்ப ஹிந்தி மொழியில் மீராபாய் பாடிய பாடல்கள் பிரபலமாக வழங்கிவருகின்றன. கீழ்வரும் பாடல்கள் மீராபாயின் பாடல்களைத் தழுவிப் பாடப்பட்டனவாகும். (ராஜபுதனத்திலுள்ள ஒரு சிற்றரசனுக்குப் புதல்வியாக மீராபாய் 1601 - ஆம் ஆண்டில் பிறந்தாள்.சிறு குழந்தையாக இருந்தபோது அவள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தைச் சுட்டி, இவரே உன் மாப்பிள்ளை என்று தாயரார் விளையாட்டாகச் சொன்னதைக் கருத்திலே கொண்டு, மீராபாய், கண்ணனையே தன் நாயகனாக வரித்து, அவனிடத்திலே அளவற்ற அன்பு செலுத்தி வந்தாள். சாது ரவிதாஸ் என்ற ஒரு பக்தர் பூஜித்துவந்த கிரிதரகோபால விக்கிரத்தைப் பெற்று, அதை அன்போடு பூஜித்து ஆடியும் பாடியும் பஜனை செய்துவரும் நாளில், கிரிதர கோபாலன் தன்னை மணந்ததாக ஓரிரவிலே கனாக்கண்டு,பொழுது புலந்த பின் தாயினிடம் தன் கனவைக் கூறுகிறாள் |
423 | | அன்னையே! தாயே! அழகன் ஜகதீசன் என்னை மணக்க இரவில் கனாக்கண்டேன்; நென்னல் இரவுகண்ட நீண்ட கனாமுழுதும் உன்னை ஒளியாமல் உரைக்கின்றேன்; கேளம்மா! |
424 | | ஆல மரங்கள் அடர்ந்து வளர்ந்தவொரு சோலையும், அந்தச் சோலை நடுவாக நீல மணிநீர் நிறைந்த குளமொன்றும், காலை எழுமுன் கனாக்கண்டேன்; அம்மா! நான், | |
|
|