முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 87 |
Untitled Document
542 | | சித்தம் இரங்கிட வேண்டுகின்றோம் - எம்மை க்ஷேமமாய்க் காத்திடக் கெஞ்சுகின்றோம்; புத்த முனியருள் போதனையை - என்றும் போற்றுதல் உங்கள் கடனாமே. |
| | 72. இயற்கை வாழ்வு | 543 | | பறந்து பறந்தெங்கும் - திரியும் பறவை வாழ்வினைப்போல், சிறந்த வாழ்வேதும் - இந்தச் செகத்தில் கண்டதுண்டோ? |
544 | | சாதிச் சண்டையில்லை - ஓயாச் சமயச் சண்டையில்லை; வேத சாத்திரங்கள் - கூறும் விதி விலக்கு மில்லை. |
545 | | தோட்டி களுமில்லை - உயர்ந்த தொண்டை மானுமில்லை; கோட்டை வீடுமில்லை - எளிய குடி யிருப்புமில்லை. |
546 | | குரு மடங்களில்லை - சீடர் குழாங்கள் ஒன்றுமில்லை; ஒருவர் முன்னே விழுந் - தொருவர் உபச ரிப்பதில்லை. |
547 | | பசுவைக் கொன்றுவிட்டுக் - கொன்ற பாவம் நீங்கிடவே பசுவின் தோற்செருப்புத் - தானம் பண்ணு வதுமில்லை. |
548 | | செக்கினை விழுங்கி - அதனைச் சீரணம் செய்யக் சுக்கக் கஷாயம் - குடிக்கும் தொழில்கள் ஏதுமில்லை. |
549 | | குடிகெடுத்துவிட்டுப் - பழிகள் கோடி செய்துவிட்டுக் கடவுளை வணங்கி - நிதமும் கண்ணீர் விடுவதில்லை. | |
|
|