Untitled Document
534 | | வண்டியில் கொண்டெமை மாட்டுகின்றீர் - காலை மாலையெல்லாம்தட்டி ஓட்டுகின்றீர்; நொண்டினா லும் விட்டுப் போகமாட்டீர் - உடல் நோவ அடித்து வெருட்டுகின்றீர். |
535 | | மோட்டார் வண்டிவந்தும் மோட்சமில்லை - நாங்கள் முன்செய்த தீவினைக் கென்செய்குவோம்; ஏட்டா லெழுத அடங்கிடுமோ - கஷ்டம் யாரிடம் சொல்லி அழுதிடுவோம்? |
536 | | கோடிகோடி ஸைக்கிள் வந்திடினும் - எங்கள் கூட்டத்துக் கேதுமோர் நன்மையுண்டோ? ஓடிஓடி உயிர்ஓய்ந்திடவோ - எம்மை உண்டாக்கி விட்டான் உடையவனே? |
537 | | மேடு பள்ளங்களில் ஓடவேண்டும் - வெய்ய வேனில் மழைகளில் ஓடவேண்டும்; காடுசெடிகளில் ஓடவேண்டும் - இந்தக் கஷ்டங்கள் யாரிடம் சொல்வோம், ஐயா! |
538 | | கொட்டகை கூடாரம் போட்டுக் கொள்வீர் - அதில் கூத்தாடிக் கூத்தாடி ஓடச் சொல்வீர்; பட்டினியாக இறந்திடினும் - இந்தப் பாடடெவர் பட்டுப் பிழைப்பர்? ஐயோ! |
539 | | ஆங்காரத் தாலும் பேராசையாலும் - நீங்கள் அண்டைஅரசரைப் போர்க்கிழுத்தால், தாங்காத் துயரெலாம் தாங்கிச்சலித்து - யாம் சாவதும் எங்கள் தலைவிதியோ? |
540 | | கல்இளைப் பாறியே நிற்கவொட்டீர் - வாயிற் கௌவிய புல்லையும் தின்னவொட்டீர்; மூலை முடக்கென்றும் எண்ணமாட்டீர் - எம்மை மூச்சு விடாமல் துரத்துவீரே. |
541 | | அழக்குக் காணம் அளித்திடுவீர் - அதற்கு ஆயிரம் வேலையும் இட்டிடுவீர்; ஏழைக் கிரங்கெனும் நீதிமொழி - நீங்கள் ஏட்டில் படித்தததை ஏன்மறந்தீர்? | |
|
|