முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 85 |
Untitled Document
526 | | வம்புகள் பேசிடும் வாயையன்றோ - பூட்டி வைப்பது நீதி முறையாகும்; நம்பி யிருப்போர்க்குத் துன்பம் இழைப்பது நல்லோர் பெரியோர் செயலாமோ? |
527 | | வெள்ளிப்பூண் கட்டிய சேணமிட்டால் - நெஞ்சு வேதனை யில்லா திருந்திடுமோ? அள்ளி யிடும்பிடிப் புல்லுக்காக - எங்கள் ஆவியைக் கொள்வ தழகாமோ? |
528 | | பக்கம் திரும்பியே பார்த்திடாமல் - எங்கள் பார்வையைக் கட்டி மறைப்பதுமேன்? திக்கெலாம் தந்த பிரமனிலும் - நீவிர் தீவிர புத்தி உடையவரோ? |
529 | | திண்ணிய லாடமும் கட்டுவதேன்? - அதில் தீயெழ எம்மையும் ஒட்டுவதேன்? புண்ணியம் நீர்செய்ய வேண்டாமையா - எம்மைப் போக்கிலே வீட்டில் போதுமையா! |
530 | | எண்ணிக்கை அற்றதோல் பட்டைகளைக் - கட்டி எம்மீது இறுக்கி முறக்கிவைப்பீர்; கண்ணுக் கழகவை ஆயிடினும் - எங்கள் கண்டம் நெரிவ தறியீரோ? |
531 | | பற்றி முதுகினில் ஏறிக்கொள்வீர் - எம்மைப் பட்சிகள் போலப் பறக்கச் செய்வீர்; சற்றும் இரக்கம் இலாதவரோ? - நீங்கள் சாத்திரம் கற்ற பயன் இதுவோ? |
532 | | ஈசன் அளித்தகால் இரண்டிருக்க - நீரும் எங்கள் குறுக்கை முறிப்பதேனோ? தாசரைப் போல்வேலை செய்திடினும் - தயை சற்றும் உமக்கு வருவதுண்டோ? |
533 | | கையில் சவுக்கொன்று போதாதென்றோ - இரு காலிலும் முட்களைக் கட்டிக் கொண்டீர்? ஐயையோ ஏழையேம்ஆவி பறித்திட ஆயிரம் கூற்றுவர் வேண்டுமேயோ? | |
|
|