Untitled Document | | மங்கி மாண்டவரை - எண்ணி வருந்த லேனோ? அம்மா! |
565 | | ஆழ்ந்த நரகொன்று - நீயே அமைத்து வைத்துக் கொண்டாய்; வீழ்ந்து வீழ்ந்து நிதம் - அதனில் வெந்துசாகின்றாய். |
566 | | 'கர்த்தனே என்றன் - மகனைக் காத்த ருள்க!' வென எத்தனை நாளாய் - நீயும் இரங்கு கின்றா யம்மா! |
567 | | பேசா வுயிர்களை - ஈசன் பேண மாட்டானோ? ஆசானும் நீயோ! - அவனோர் அறியாப் பாலகனோ? |
| | 74. வாழ்க்கைத் தத்துவங்கள் | 568 | | நாமே நமக்குத் துணையானால், நாடும்பொருளும் நற்புகழும் தாமே நம்மைத் தேடிவரும்; சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ? |
569 | | நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு, நேயம் கொண்ட நெறியோர்க்கு, விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு வெல்லும் படைகள் வேறுளவோ? |
570 | | உள்ளந் தேறிச் செய்வினையில் ஊக்கம் பெருக உழைப்போமேல், பள்ளம் உயர்மே டாகாதோ? பாறை பொடியாய்ப் போகாதோ? |
571 | | சாதிசாதி என்றுநிதம் சண்டை போட்டு, மண்டைகளை மோதி மோதி உடைப்பதொரு மூடச் செயலென் றுணரீரோ? |
572 | | வாட்டும் உலகில் வழுத்தரிய வாழ்க்கைத் துணையாம் மங்கையரை | |
|
|