பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு91

Untitled Document
ஆட்டும் பொம்மை அடிமைகளாய்
ஆக்கி வைப்ப தழகாமோ?

573 கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே?

75. வாழ்க்கை நிலையாமை

574 கருணையின்றி மனிதருள்ளம் கருங்கல் லான
காரணத்தி னால்வந்த கஷ்டந் தன்னை
வருணனையால் வேலையில்லாத் திண்டாட்டத்தால்
வந்தவிளைவென்றுலகில் வழுத்து வாரால்!
பொருளையெலாம், இறந்தவர்கள் யாவரேனும்
பொக்கணமாய்க் கட்டியெடுத் தோடினாரோ?
இருளை ஒளி என்பவர் முன் பேச்சும் உண்டோ?
ஏழையுரை அம்பலத்தில் ஏறு மேயோ?

575 ஏகாந்தம் யாவருக்கும் இசைய மாட்டாது;
எந்நாளும் கூடியே வாழ வேண்டும்;
சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை;
தளர்ந்தவரைத் தாங்குவதே தரும மாகும்;
ஆகாய மளவுயர்ந்து வளர்ந்து நின்ற
அரண்மனையும் அரைநொடியில் அழியுமென்று
பீகாரால் கொற்றாவால் அறியார் இந்தப்
பேருலகிற் பின்எதனால் அறிவார்? ஐயா!

76. குழந்தை

576 எங்கே இருந்து வந்தாய்? குழந்தாய்! - அதை
யானும் அறிந்திடச் சொல் குழந்தாய்!
எங்கும் நிறைவெளியில் இருந்தேன் - சற்றே
இங்கும் இருக்க வந்தேன், அம்மா!

577 நீல மலர்போலும் விழிகள் - எங்கு
நீ தேடிப் பெற்றாய்? என் குழந்தாய்!
ஞாலம் இதற்கு வரும் வழியில் - வானம்
நன்கொடை தந்தவை, அம்மா!