Untitled Document
594 | | வளர்த்த ரோஜாவும் - புதுமண மகிழ்ச்சி காட்டு தம்மா! அழைத்து வாராய், அம்மா! - தம்பியும் அறிந்திடானோ? அம்மா! |
595 | | யார் அழைத்தாலும் - அவன் செவிக்கு எட்ட மாட்டாதே; பாரில் நம்மை அவன் - இனிவந்து பார்க்க மாட்டானே. |
596 | | வாச மலரைப்போல் - வளர்ந்தவன் வாடி விட்டானே; ஈசன் சன்னதியில் - விளையாடி இருக்கின் றான்அப்பா! |
597 | | குயிலைத் தேடானோ? கிளியொடு கொஞ்ச வாரானோ? மயிலை நோக்கானோ - நம்மையெல்லாம் மறந்தும் போனானோ; |
598 | | வேனிற் காலமெல்லாம் - நம்மையிங்கு விட்டிருப் பானோ? யானும் என்னசெய்வேன்! - தனித்தனி இருப்ப தெப்படியோ? |
599 | | காலை மாலைதனில் - சிற்றோடைக் கரையில், சோலைதனில் சீலச் செல்வனொடு - சுற்றிநிதம் திரிதல் போச்சுதையோ! |
600 | | இனிய கதையெல்லாம் - அவனைப்போல் யாவர் சொல்வாரம்மா! கனியைச் செந்தேனை - இனிஎந்தக் காலம் காண்பேன், ஐயோ! | |
|
|