பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு95

Untitled Document
78. மூன்று விஷயங்கள்
601 கூவிப் பறக்கும் ஒரு - கிளியினைக்
     கூட்டில் அடைத்து வைத்தால்
தேவர் உலகமெலாம் - அதுசினத்
     தீயை யெழுப்பிடுமே!

602 மன்னிய சோலையிலே - ஒருகுயில்
     வாடி வருந்து மெனில்,
கின்னரர் கிம்புருடர் - தளர்ந்ததும்
     கீதம் இழப்பார் ஐயோ!

603 சிட்டுக் குருவிக்கேனும் - ஒருசிறு
     தீங்கினைச் செய்பவரை
நட்டநல் நண்பராக - உலகமும்
     நம்பிக்கை கொள்வதுண்டோ?

79. பறவையின் சிந்தனை I
முட்டைக் கரு
604  ஆதியில் ஒருசிறு வீட்டை அண்டியான்,
ஏதுமங் கொருகுறை யின்றி வாழ்ந்தனன்;
ஓதுமிவ் வுலகுருச் சிறுத்து ருண்டவோர்
சோதிவெண் நீல்நிறத் தோடென் றெண்ணினேன்.


கூட்டில் குஞ்சு
605 விடிது வீ்ழ்ந்திட, வேறும் ஓரிடம்
கூடியே சிலதினம் குடியிருந்தனன்;
ஈடறு வையகம் உலகம் என்அனை
நாடிய காப்பகம் என்று நம்பினேன்.


இறகு முளைக்கும் சிறு பறவை
606 கண்ணுறு பொருளவை காண ஓர்தினம்
எண்ணிஎன் கூட்டரு கிறங்கி நின்றனன்.
திண்ணிய உலகில் தழையிற் செய்ததாம்.
புண்ணிய மில்விழி பொருந்தினேன் என்றேன்.