பக்கம் எண் :

96கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பறக்கும் பெரும் பறவை

  607 முடிவினில் மரம் தழை முகடு தாண்டிவிண்
படுமெழில் நீல்நிறப் பரப்பைக் கண்டனன்;
தொடுமுல குண்மையில் எங்ஙன் தோன்றுமோ?
அடிமுடி அறிகிலன்; அறிவர் யாவரே?

பறவையின் சிந்தனை - II

முட்டைக் கரு

608 முற்றுங் கருவாகி - ஒருசிறு
     முட்டையில் வாழ்க்கையிலே
சுற்றும்உல கெனக்கே - உருண்டவெண்
     தோடா யிருந்ததம்மா!

கூட்டுக் குஞ்சு

609 குஞ்சுப் பருவத்திலே - பிறிதொரு
     கூட்டில் இருக்கையிலே
விஞ்சும் உலகினையான் - உலர்ந்தபுல்
     வீடாகக் கண்டேனம்மா!

இறகு முளைக்கும் சிறு பறவை

610 இறகு முளைக்கையிலே - பறந்திட
     யானும் பழகையிலே
நிறையும் உலகெனக்குத் - தழைகொடி
     நேரிட மானதம்மா!

பறக்கும் பெரும் பறவை

611 நீண்ட வெளிவரவே - உயர்ந்தவிண்
     நீலந் தெரிந்த தம்மா!
ஆண்டவ னன்றிஎவர் - உலகை
     அறிந்திட வல்லார் அம்மா!