பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு97

Untitled Document
80. குருட்டு பையன்
612 இப்பிறப்பில் ஒரு பொழுதும் எனக்கறியமுடியா
     திருக்கும்ஒளி என்பதென்ன? இருவிழியின் அடையும்
ஒப்பரிய நன்மைகள்இக் கண்கெட்ட சிறியேன்
     உணரும் வண்ணம் உரைத்திடுவீர் உற்ற உறவினரே!

613 அனுதினமும் கண்காட்சி அற்புதங்கள் பேசி,
     அகங்களிப்பீர்? ஆதித்தன் சோதிமயம் என்பீர்;
எனதளவில் வெம்மையெனத் தோற்றமிவன் செயலால்
     இரவுபகல் மாறிவரல் எங்ஙன் அறிவேனே!

614 பாடிவிளை யாடுபொழு துறங்குபொழு தல்லால்
     பகற்பொழு திராப் பொழுதிப் பகுப்பெனக்கு முண்டோ?
நாடியுணர்ந் திருக்கநிதம் கூடமெனில் எனக்கிந்
     நானிலத்தில் ஓயாத பகலாகும் அன்றோ?

615 மைபடியும் வானமென்றும், வில்லென்றும், வர்ண
     வகையென்றும் மனமகிழ்ந்து வனப்புரைகள் தருவீர்
ஐவகையிப் பொறியிருக்க வேறுபொறி யுறுமேல்,
     அறியுலக மாட்சியெலாம் அளவிடவும் எளிதோ?

616 உலகிலெனக் குற்றபெருங் குறைநோக்கி நீவிர்
     உளம்வருந்தல் பன்முறைநெட் டுயிர்ப்பொடு கேட்டறிவேன்
அலகிறந்த பொறுமையக மிரக்கஒரு நாளும்
     அறியமுடி யாதகுறை அனுபவிப்ப தரிதோ?

617 ஒருகாலும் நீக்கமுடி யாதகுறை வந்தென்
     உளத்திலெழும் பெருங்களிப்பை அழித்திட லாகாதே
வருபாடல் இதுவழுத்து பொழுதேழைக் குருட்டு
     வாலிபனா யிருப்பினுமோர் மகராசன் யானே.

81. மலையும் அணிலும்
618 'அற்பத் திருடா! ' என்றெனை யழைத்த
வெற்பே! யானும் விளம்பக் கேளாய்;
'அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையும் தோற்றமும்