பக்கம் எண் :

98கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  வறப்பினும் வளந்தரு வண்மையும்' உனக்கென்று
உரைமொழி முற்றும் உண்மையே. ஆயின்,
ஒருவகைப் பொருளின் ஒருல காமோ?
ஒருவெயில் மழையின் ஓராண்டு தேறுமோ?
பற்பல பொருளும் பற்பல பருவமும்
ஒன்றாய்க் கூடினே உலகாம், ஆண்டாம்.
ஆதலின், யானிவ் வகிலமீ துதித்தே
இருப்பதை இழுக்கா எண்ணவும் மாட்டேன்.
என்தொழில் இயற்றவும் யாவர் வேறுளர்?
உன்பெரும் உருவெனக் கில்லை. எனக்கும்,
என்சிறு வடிவில்லை. மேலும், என்றன்
உள்ளக் களிப்பில் உற்று நோக்கில்
எள்ளத் தனையும் உனக்கிலை யிலேயே.
அணிற்பிற்றை சாடி ஓடி அலைந்து
விளையா டற்கு விரிவிடம் பெறுவாய்.
ஐய மிதற்கிலை. அடலும் அற்றலும்
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொரு விதமாம்;
அறத்தொடும் முறையொடும் ஆழ்ந்த அறிவொடும்
அனைத்துமிவ் வுலகில் அமைக்க லாயின.
வனங்களை முதுகில் வகித்து நின்றிட
வல்லைநீ யாயின், மற்றிங் கெனைப்போல்
நெல்லைக் கொறிக்க நின்னா லாகுமோ?
யாவரே பெரியர்? யாவரே சிறியர்?
ஒன்றிற் பெரியர்? ஒன்றிற் சிறியாராம்;
ஒன்றிற் சிறியர்? ஒன்றிற் பெரியராம்.
ஆதலின், அற்பர் ஆகா தவரென
ஓதுதல மடமையின் சாதனை யாமே,

82. அழியா உயிர்ப்பு

619 ஓதற் கரியதாம் ஊழி காலப்
புழுதியியல் அழியுமிப் புல்லாங் குழலினை
எறிந்தனன் காந்தனே! இறங்கிநீ அதனை
எடுத்தனை நோக்கி, எளிய சிறிய இக்