பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு99

Untitled Document
  கருவியுள் ஈறிலாக் காலம்என் ஆவி
தவழ்ந்திடிம் என்னச் சாற்றினை, யானும்
தேர்ந்தொரு செயலும் செய்திடா ததனை
அந்நாள் முதலாப் பின்னாள் என்றும்உன்
கையடைப் பொருளாய்க் காத்திட வைத்தனன்.
அற்புத மூர்த்தி! நின் அருளால் இன்று அதில்
மன்உப சாந்தமும் வைராக் கியமும்
இடையீ டின்றி உதிரொலி செயுமே.
துன்பம் அடர்ந்து தொடருமிவ் வாழ்வில்
இன்ப வசந்தம் எழில்பெற வந்து
மலர்வது கண்டு மனம்மகிழ்வுறுமே!
சிற்பர்க் குயிராம் சிற்பனே! உன்றன்
அழகிய வடிவம் அடியனேன் உடலச்
சிலையில் இனிது தெரியச் செய்தனை.
வையகம் போற்றுந் தெய்விக நண்ப! நின்
பூரணக் காதலே பொங்குவ தென்னுளே.
அலைகளில் ஓரலை யானும் ஆயினேன்.
கவிதையஞ் செல்வி களிப்பொடு வந்தென்
நாவிலே நின்று நடம்புரி கின்றாள்.
உள்ளத் தமுதம் ஒழுகத்
தெள்ளிய கீதம்இச் செவிக்கமு தூட்டுமே.

83. உண்மை கண்டவர் யார்?

620 உரைக்கும் உண்மையென்று - பலநூல்
     ஊன்றி ஆராய்ந்தேன்;
திரைக்கு மேல்திரையே - கண்டு
     திகைத்து நின்றுவிட்டேன்.

621 வேறுவேறான - மதங்கள்
     வேறு வேறாகக்
கூறு கின்றதனால் - உள்ளம்
     குழம்பு கின்றதப்பா!

622 'கற்றைச் சடையனே - ஆதிக்
     கடவுள், ஐயமிதில்
சற்று மேயில்லை' - என்று
     சைவர் கூறுகின்றார்.