| | நாடிவந்தபோதும், தம்மை நிறம் மாற்றிக் கொள்ளாது அப்பதவிகளைப் புறக்கணித்தவர். விளம்பரத்தை விரும்பாதவர். எளிமை வாழ்வை விரும்புபவர், ழுசங்கப் புலவர் தம் பாடலே பாடல்ழு என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனாரைத் தந்தையாகவும் கருதிக் ழுகுலமுறை கிளத்தும்ழு கொள்கையுடையராக விளங்குகிறார். | | | பெரும்பாலும் `தன்னை மறந்த லயம் தன்னில்ழு இருக்கும் இயல்பினார்; `புட்டிழுகளின் துணையால் அன்று; எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால். கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித்திறனாகும். கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரிமாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது; இஃது இயற்கை வழங்கிய அருட்கொடை என்றே கூறல் வேண்டும். | | | குடியரசு, திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, மன்றம், தென்றல், எழில் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு தலைசிறந்த இதழ்கள், இவர்தம் எழுத்தோவியங்களைத் தாங்கி வந்துள்ளன. | | | பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இவர்தம் நூல்கள் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் கவிதை நூல்கள் `முனைவர்ழு பட்டத்திற்காகவும், `எம்.ஃபில்ழு பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ழுஅழகின் சிரிப்புழு என்ற இவர்தம் கவிதை 1950 ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரியதெனப் பாவேந்தர் பாரதிதாசனால் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிறப்பினையுடையது. 1966இல் ழுமுடியரசன் கவிதைகள்ழு என்ற நூலும் 1973இல் ழுவீரகாவியம்ழு என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பலபாடல்கள் சாகித்திய அகாதெமியால் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் மொழி | | | |
|
|