| | பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், சோவியத் மொழியிலும் இவரது கவிதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. | | | 1966இல் பறம்புமலையில் நடந்த பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவர்க்குக் `கவியரசு' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1973 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, `நல்லாசிரியர் விருது' வழங்கிச் சிறப்பித்தது. 1979ஆம் ஆண்டு பெங்களூர் உலகத் தமிழ்க்கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் விருப்பத்திற்கிணங்க, நெய்வேலி, `பாவாணர் தமிழ்க் குடும்பத்தினர்' பாராட்டு விழா எடுத்துச் சிறப்பித்தனர். இதுபோலவே இவர்பாற்பயின்ற மாணவர் சிலர் இவர்தம் மணிவிழா நாளன்று (7-10-1979) பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர். சிவகங்கையில், கவிஞர் மீரா, பாரதியார் நூற்றாண்டு விழாவில், `பொற்குவை' அளித்து மகிழ்ந்தார். 1980ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழக மாநில இலக்கிய அணி, கவிஞரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை சென்னையில் நடத்தியது. அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்தாயிரம் வெண் பொன் பொற்கிழியும் `கவிப்பேரரசர்' எனப் பட்டமும் வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்தார். 1983ஆம் ஆண்டு தமிழகப் புலவர்குழு "தமிழ்ச்சான்றோர்" என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது. | | | 1993ஆம் ஆண்டு அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் விக்கிரமன், எழுத்தாளர்களுடன் கவிஞரின் இல்லத்திற்கு வந்து நிதி வழங்கிச் சிறப்புச் செய்தனர். 1993ஆம் ஆண்டு, கரூரில் `இந்திராணி இலக்கியப் பரிசு', இவரின் `பூங்கொடி' காப்பியத்திற்கு வழங்கிச் சிறப்பித்தனர். 1993ஆம் ஆண்டு | | | |
|
|