| | 1994ஆம் ஆண்டு `ராணா விருதும்' பத்தாயிரம் வெண்பொன் பொற்கிழியும் ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையினர், கவிஞரின் தமிழ்ப் பணிக்காக வழங்கிச் சிறப்பித்தனர். 1996 ஆம் ஆண்டு, அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தினர், `கல்வி உலகக் கவியரசு' எனப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். 1997 ஆம் ஆண்டு, கவிஞர் பயின்ற மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில், பழைய மாணவர் பாராட்டு விழா வரிசையில், முதன்முதலாக இவர்க்குப் பாராட்டு விழா நடத்தி, `பொற்குவை' வழங்கிச் சிறப்பித்தனர். | | | `பாவரசர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு' என்ற ஆய்வு நூல், முனைவர் மு. இளங்கோவன் என்பாராலும், `முடியரசன் படைப்புகள்' என்ற ஆய்வு நூல் முனைவர் சிரீகுமார் என்பாராலும், `பூங்கொடியும் மணிமேகலையும்' என்ற ஒப்பாய்வு நூல் முனைவர் மு. நிலாமணி என்பாராலும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. | | | `கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்' என்னும் பெயரில், ஈரோட்டில், புலவர் தி.மு. அரசமாணிக்கம் என்பார் மன்றம் அமைத்துத் தமிழ்த் தொண்டு செய்து வருகிறார். எல்லா நம்பிக்கைகளிலும் மேலானதாக அவர் கொண்டிருப்பது "என்றும் நானோர் இளைஞன்" என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கை சுவையும், பயனும் முதிர்ந்த பல கவிதைகளை மேலும் தரும் என்று நம்புவோமாக. | | | -பாவலர்மணி ஆ. பழனி. | | | |
|
|