பக்கம் எண் :

சுவடியின் மரபு தெரிவுறு காதைபக்கம் : 101

சங்கப் புதையலும் - சிலம்பின் சான்றும்
 

 

இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின  
  பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச் 25
  சங்கப் புதையலும் சாமி நாதத்
துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்;
சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப்
பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;
 
  இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30
  வாரா திருப்பின் வளமிலா மொழிஎன
நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்;
நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம்,
செல்லார் குழுவும் சிதைக்கா தொழிந்தது;
 
  நல்லோய்!  இசையும் நாடகச் சுவடியும் 35
     
  வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்!
அகப்பட் டிருப்பின் ஆவணப் பேச்சைத்
தகர்த்தெறிந் தொழிப்பேன்; சுவடிகள் தவறினும்
அந்நூல் தமிழுக் கிலையென் றறைதல்
 
  அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல்!  40
  அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார
உரைதரும் ஆசான் அடியார்க்கு நல்லான்
புரையற உரைத்தது புலமுளோர் அறிவர்;
 
     
  பழந்தமிழ் இசைகள்  
     
  யாழும் குழலும் எழுப்பிய இசைதான்  
  வாழும் தமிழோ?  வருமொழி இசையோ? 45
  அவ்விசைக் கருவிகள் ஆய்ந்து கண்டவர்  

---------------------------------------------------------------

  சாமிநாதன் - திராவிடக் கலாநிதி உ. வே. சாமிநாத ஐயர், நேரார் - பகைவர், செல்லார்குழு - கறையான் கூட்டம்.