பக்கம் எண் :

பக்கம் :102பூங்கொடி

 

 

 

செவ்விய தமிழர்; சிறந்தஇக் கருவிகள்
எப்பொருட் டியற்றினர்?  இசைப்பொருட் டன்றோ?
பாணன் பாடினி பாடற் றொழிலோர்
 
  மேனாள் ஈண்டு மேம்பட வாழ்ந்தனர்; 50
  அவர்தாம்
எம்மொழிப் பாடல் இசைத்தனர்?  ஆய்ந்துணர்!
திணைகள் ஐந்தெனச் செப்பிய முன்னோர்
இணையும் வகையால் பண்ணும் இசைத்தனர்;
 
  இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ? 55
     
 

மீனவன் சங்கம் புகுதல்

 
     
  ஆதலின் நம்பால் அனைத்தும் இருந்தன;
ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாட
நோதகச் சிலபல தீதுற் றழிந்தன;
அந்தோ உலக அரங்குக் கொளிசெயும
 
  நந்தா விளக்கே!  நாமிசைப் பாவாய்! 60
  மண்ணக முதல்வி!  எண்ணுநர் தலைவி!
நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக்
கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,
ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்து
 
  பாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; 65
  `அயரேல் மீனவ!  அறைகுவென் கேள்நீ!
பயில்தரு மறவர் பாண்டிய மரபினர்
சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள்
எங்கெங் குளவோ அங்கெலாம் துருவித
 
  தொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள் 70
  பகுத்துப் பார்ப்பின் பண்ணும் கூத்தும்
வகுத்துக் கூறுநூல் வாய்க்கவும் கூடும்';
செவியில் இவ்வுரை தேனெனப் பாய்ந்தது;
 

---------------------------------------------------------------

 

நோதக - வருந்த, நந்தா - அழியாத, துருவி - ஆராய்ந்து.