பக்கம் எண் :

பக்கம் :114பூங்கொடி

 
  றூக்கமும் உரனும் மீப்பட லாயினள்;
அயலி லிருந்தே அழிவினை வித்தும்
 
  பயனில பேசும் பதர்சிலர் ஒழிய 25
  மயல்ஒழிந் தாரெலாம் மதித்தனர் போற்றினர்;
தளிர்க்கும் அவள்புகழ் தகைப்பார் இல்லை;
முளைப்பவர் எவரும் முகங்கவிழ்த் தேகினர்;
இவ்வணம் இசையால் ஏற்றம் பெற்றனள்;
 
     
 

காதல் மணம்

 
     
  அவ்வுழை ஒருவன் அழகிய கூத்தன் 30
  ஆடல் வல்லான் அதனதன் நுணுக்கம்
நாடிய புலத்தான் நாடெலாம் வியந்து
`நிகரிலை இவற்கென நிகழ்த்துநற் பெயரோன்
புகழில் மிதப்போன், பூவை எழிலியை
 
  மலர்மண மாலை சூட்ட விழைந்தனன்; 35
  கலைஞர் இருவர் கருத்தும் ஒன்றின;
கூத்தும் பாட்டும் குலவி மகிழ்ந்தன;
ஏத்தும் புகழோ எழுந்தது திசைஎலாம்;
 
     
 

கூத்தன் அயல்நாடு செல்லுதல்

 
     
  மண்டிய புகழை மாந்திய மாந்தர்  
  தெண்டிரை கடந்த திசையினில் வாழ்வோர் 40
  கண்டு மகிழக் கருதின ராகி
வேண்டி அழைத்தனர் விரைந்தனன் கூத்தனும்;
ஈண்டிருந் தாள்இசை எழிலி தனித்தே;
ஆழி கடந்தவன் ஆடற் றிறமெலாம்
 
  ஊழியல் முறையால் உணரக் காட்டினன்; 45
  `கண்டிலாப் புதுமை கண்டனம்' என்று  

---------------------------------------------------------------

  மீப்படல் - மேம்படல், தகைப்பார் - தடுப்பார், முளைப்பவர் - தோன்றுபவர், இவற்கு - இவனுக்கு, மண்டிய - நிறைந்த, தெண்டிரை - கடல், ஊழியல் முறை - நூலின் முறை, கண்டனம் - கண்டோம்.