|
| கூத்தன் ஒரு தீவை அடைதல் | |
| | |
| கண்டவர் புகழ்ந்து கைப்பொருள் நல்கப் புகழும் பொருளும் மிகவரப் பெற்றே அகநிறை களிப்பால் ஆழ்கடல் மிசையே | |
| மீள்வோன், பெருவளி மிடல்கொடு தாக்க | 50 |
| நீள்கலம் உடைந்து நெடுங்கடல் மூழ்கலும்; பாய்மரம் சிதறிய பகுமரம் பற்றி ஓய்விலா அலைகள் உந்தி உதைப்பக் கடுங்கண் மறவர் கல்லா மாந்தர் | |
| கொடுங்கள் உண்டியர் குழீஇ வாழும் | 55 |
| மொழிபெயர் தீவின் கழிபடு கரையில் விளிவில னாகிச் சார்ந்தனன் கூத்தன்; | |
| | |
| எழிலியின் கையறுநிலை | |
| | |
| `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால் உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்'என | |
| உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த | 60 |
| கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்; துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர் வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய | |
| பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! | 65 |
| மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப் பாழும் இடர்க்கடல் வீழும் தனியேன் எவ்வணம் உய்குவென்? யாதுநான் செய்குவென்? கவ்விய இத்துயர் கடப்பது யாங்ஙனம்? | |
--------------------------------------------------------------- |
| பெருவளி - புயல், மிடல் - வலிமை, கலம் - மரக்கலம், பகுமரம் - மரத்துண்டு, உண்டியர் - உணவினர், குழீஇ - கூடி, மொழிபெயர் - மொழிமாறிய, கழி - உப்பங்கழி, விளிவிலன் - இறக்காதவன், கொடுவரி - வளைகோடு, கவ்விய - பற்றிய. | |
| | |