பக்கம் எண் :

எழிலியின் வரலாறறிந்த காதைபக்கம் : 117

 
 
  பான்மைய ளாகிப் பண்ணுயர் எழிலி,
வாழ்க்கைத் துணைவன் வரவெதிர் நோக்கி
வீழ்த்திய துயரம் விலகிட இருந்தனள்;
 
     
 

கூத்தன் பழுவூர்த் தலைவனை அடைதல்

 
     
  அடைகரை சேர்ந்து விழுமகன் றன்னை  
  மிடைமணற் பரப்பின் இடையினிற் கண்டோர் 100
  பழுவூர்த் தலைவன் பக்கலிற் சேர்த்தனர்,
கொழுவிய தலைமகன் கூத்தன் நிலைகண்
டிரங்கிய நெஞ்சினன் இவன்பசி களைவோன்
நறுங்கனி பலவும் நல்கின னாகப்
 
     
 

தலைவன் வியப்பும் வினாவும்

 
     
  பசியும் தளர்வும் நீங்கியோன் பழுவூர் 105
  வதியும் பிறமொழி மாந்தர் தம்முடன்
அவர்மொழி பேசிட, அவ்வூர்த் தலைவன்
உவப்பும் வியப்பும் உற்றன னாகித்
`தவறிலா துரைத்தனை எமது தாய்மொழி!
 
  யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி! 110
  ஆங்கிலம் வடபுலத் தாரிய மொழிகளால்
தீங்குவந் துறுமென நின்னுடைத் தேய
மாந்தர் பலரும் மற்றைய மொழிகளைக்
காந்திய நெஞ்சொடு கனன்று வெறுத்துரை
  கூறுவர் என்றே கூறக் கேட்டுளேம்; 115
  ஆயினும் நீயோ அழகுற எமது
தாய்மொழி புகன்றனை யாங்ஙனம் உணர்ந்தனை?
ஈங்கெமக் குணர்த்துதி' என்னலும் உரைப்போன்
 
     
 

தமிழரின் பரந்த மனப்பான்மை

 
     
  `வருவிருந் தோம்பும் பெருந்திரல் உடையோய்!  
  வருமொழி தமக்கெலாம் வணங்கி வரவுரை 120

---------------------------------------------------------------

  மிடை - நெருங்கிய, கொழுவிய - வளமிக்க, காந்திய - கொதிக்கும்.