|
| தருவது தொழிலாக் கொண்டது தமிழகம் அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து மயலற மொழியும் மாந்தர் பற்பலர் எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி! | |
| எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை | 125 |
| நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்; ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின் | |
| சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்; | 130 |
| | |
| பிறமொழி பயில்வோர் | |
| | |
| மொழியியல் ஆய்வோர் முந்நீர் வணிகர் எழிலுறுங் கூத்தர் இவ்வகை மாந்தர் பன்மொழிப் பயிற்சி பாங்குறப் பெறுவர்; என்தொழில் கூத்தென ஏற்றுளேன் ஆதலின் | |
| அயன்மொழி சிற்சில அறிந்துளேன் அன்ப! | 135 |
| | |
| பொய்ம்மொழி நம்பேல் | |
| | |
| உரிமை வாழ்வை உவந்தனர் என்னினப் பெருமை உணர்ந்த பெரியோர், அதனால் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டினர்; ஊட்டத் தளர்ச்சி நீங்கித் தமிழக மாந்தர் | |
| வளர்ச்சி நாடிக் கிளர்ச்சிகள் செய்தனர்; | 140 |
| தமிழர் உயர்வைத் தகைக்கக் கருதிப் ழியும் பொய்மையும் பகர்தல் நாணா இழிமதிக் கூட்டம் எம்செயல் கண்டே அவ்விய நெஞ்சில் அச்சமும் சேர | |
| எவ்வகை யேனும் தமிழியல் எழுச்சியைக் | 145 |
--------------------------------------------------------------- |
| எம்மொழி - எந்தமொழி, எம்மொழி - எமதுமொழி, தரியேம் - பொறுக்கமாட்டோம், முந்நீர் - கடல், அவ்விய - பொறாமையுற்ற. | |
| | |