|
| கொல்லும் நோக்கொடு குழுமிய சிற்றினம் ஒல்லும் வகையாற் பல்வகைப் பழியைச் சொல்லித் தீர்த்தது சூழ்ச்சிகள் விளைத்தது; சூழ்ச்சியால் அயன்மொழி ஆட்சியைப் பரப்பிடப் | |
| பாழ்ச்செயல் புரிந்தது; பகைமனங் கொண்டெமைக் | 150 |
| குறுமனம் என்று குறைகள் சொற்றது; பிறமொழி வெறுக்கும் பெற்றியர் என்றது; உடனிருந் தழிக்கும் நோய்நிகர் மாந்தர் கொடுமனம் உடையோர் விடுபொய் மொழியை | |
| நண்ப! மெய்யென நம்பேல்; எம்முயர் | 155 |
| பண்பினை நடுநிலைப் பாங்கினர் ஏத்துவர்' எனஅக் கூத்தன் எடுத்தியம் பின்னால்; | |
| | |
| தலைவன் மகிழ்வும் வேண்டுகோளும் | |
| | |
| மனமிகக் களித்த பழுவூர்த் தலைவன் கூத்தன் உரைத்திடும் கொள்கைகள் போற்றி | |
| `நாத்துணை யாகிய நாவல! ஈங்கிவண் | 160 |
| காத்துனைப் போற்றிடக் கருதினம்; எம்முழைச் சின்னாள் வதிந்து சிறியேம் மகிழ நன்னூல் ஒன்றின் நலமுரைத் தேகுதி! கூத்தின் திறமெலாம் பார்த்திடும் விழைவினேம் | |
| ஆயினும் நின்குழு அனைத்தும் இழந்து | 165 |
| பாய்மரம் துணையாப் பற்றிவந் துற்றனை; ஆதலின் நன்னூல் அறநூல் ஒன்றினை ஓதுதி எமக்கு'என உரைத்தன னாகக் | |
| | |
| கூத்தன் திருக்குறள் உரைத்தல் | |
| | |
| கூத்தனும் இசைந்து குலவி மகிழ்ந்தனன்; | |
| பாத்திறம் காட்டும் பாவலன், நாவலன், | 170 |
--------------------------------------------------------------- |
| சொற்றது - சொல்லியது, எம்முழை - எம்மிடம், பாத்திறம் - பாடல் திறம். | |
| | |