பக்கம் எண் :

பக்கம் :120பூங்கொடி

 
  தீத்திறம் யாவும் தீர்த்திடும் ஆசான்,
உலகம் உய்ந்திட உயர்நிலை எய்திடப்
பலபொருள் பொதிகுறட் பாவினைத் தந்தனன்;
எப்பா லவரும் ஏத்தும்அம் முப்பால்

 
  செப்பிய பொருளறம் தப்பா துரைத்து 175
     
 

பழுவூரார் பரிசில் அளித்தல்

 
     
  எஞ்சா துணர்த்திய எழிலறம் அனைத்தும்
நெஞ்சாற் கொண்டனர்; நிறைமொழி மாந்தன்
வள்ளுவன் ஓதிய வாய்மைகள் கண்டனர்;
 
  தெள்ளிய தமிழியம் தேர்ந்தனர் அன்பை 180
  உள்ளிய பழுவூர் உறையும் மாந்தர்;
நன்னூல் மொழிந்திடும் நவைதவிர் அறமெலாம்
பன்னூற் கூத்தன் பகர்ந்திடக் கேட்டுக்
கழிமிகு மகிழ்வினர் நிறைபடு நிதியம்
 
  அரும்பொருள் பலவுடன் அளித்தனர் போற்றப் 185
     
 

பிரிந்தவர் கூடுதல்

 
     
  கருங்கடல் கடந்தனன் கலந்தரு துணையால்
தாயகம் கண்டனன் தளிர்த்தனன் மனனே;
வேயனை தோளி மீளுறுங் காதலற்
 
  காணலும் நீள்துயர் களைந்தனள் ஆங்கே; 190
  பேணிய கூத்தும் பெரும்பே ரிசையும்
நீணில மாந்தர் நெஞ்சங் களிகொள
மீண்டும் மலர்ந்தே யாண்டும் பரவின;
எழிலிதன் வாழ்வில் எழிலி ஆயினள்;
 
     
 

பூங்கொடி எழிலிபால் எழுதல்

 
     
  தொழுதகும் அந்தத் தூயவள் பாங்கில் 195
  எழுக! இசையின் நுணுக்கம் யாவும்
பழுதற உணர்க! பரப்புக பாரில்!
 
  என்றனர் அடிகள் எழுந்தனள் அவளே. 198

---------------------------------------------------------------

  தமிழியம் - தமிழின் கொள்கை, வேயனை தோளி - எழிலி.