|
| விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே! நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங் காப்பியம் விளைத்திடல் வேண்டும் பலப்பல இன்றே, அருமைத் தமிழ்க்கிஃ தாக்கப் பணியாம், | |
| தரும்நமைத் தலைமுறை தலைமுறை வாழ்த்தும்; | 75 |
| | |
| போலிக் கவிதைகள் | |
| | |
| போலிக் கவிஞர் புனைபவை புனைக! வேலி யிடினும் விளைபவை விளையும்; பயனும் பண்பும் பழுநிய நூல்கள் வியனுற வெளிவர முயலுதல் வேண்டும்; | |
| புதியநம் சுவடிமுன் போலிச் சுவடிகள் | 80 |
| கதிரோன் முன்னர்க் கைவிளக் காகும்; நாளைய உலகம் நந்தமிழ் ஏத்தும்; | |
| | |
| மன்னுபுகழ் நிறுவுக | |
| | |
| பாளை விரிநகைப் பாவாய்! நின்பாற் பல்வகைப் புலமை படிந்திடல் கண்டேன்; | |
| நல்லிளம் பருவத்து நாலுந் தெரிந்தனை! | 85 |
| நால்வகைப் பாவும் நன்கனம் யாத்தல் கைவரப் பெறுதியேல் கன்னிநீ பூண்டுள செய்கைக் குறுதுணை சேர்க்கும், அவ்வினை அரிவை நினைக்கும் அரியதொன் றன்று, | |
| சிறிதின் முயலினும் தேர்ந்து தெளிகுவை; | 90 |
| மன்னா உலகத்து மன்னுதல் வேண்டின் தன்புகழ் நிறுவிடத் தலைப்படல் வேண்டும்; நின்னுளம் யாதென நிகழ்த்துதி' என்னலும்; | |
| | |
| பூங்கொடி இசைவு தருதல் | |
| | |
| `அன்னையிற் சால அன்புளம் காட்டி | |
--------------------------------------------------------------- |
| பழுநிய - நிறைந்த, மன்னா - நிலைபெறாத, மன்னுதல் - நிலைபெறல், நிகழ்த்துதி - சொல்லுவாய். | |
| | |