18. இசைப்பணி புரிந்த காதை | |
|
| அருண்மொழி மகிழ்ச்சி | |
| | |
| எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும் பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்; | |
| தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட | 5 |
| ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே; | |
| | |
| எழிலியின் மகிழ்ச்சி | |
| | |
| இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன் | |
| விசையுறு மரக்கலம் சிதைவுறு காலை | 10 |
| விளிவில னாகி மீளுதல் கண்ட காலையின் மிகவே களிகூர்ந் தனளே; | |
| | |
| அடிகள் விழைவு | |
| | |
| குறளகங் கண்ட மலையுறை யடிகள் உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும் | |
| நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி | 15 |
| `வஞ்சி! தமிழிசை வளர்வான் வேண்டி நிலையம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென்; பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்; இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர் | |
| திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்; | 20 |
--------------------------------------------------------------- |
| பாரகம் - உலகம், அடங்கலும் - முழுவதும், ஏமுறல் - மகிழ்தல், ஞான்றினும் - பொழுதினும், காலையின் - பொழுதைவிட, பயிலிகள் - பயிற்சியாளர்கள், இசை - புகழ். | |
| | |