| சண்டிலி இசைப் பயிற்சி | |
|
| மூளும் அருள்மன முத்தமிழ்ச் செல்வி நாளும் நாளும் நல்லிசை யமிழ்தம் வாரி வாரி மகிழ்ந்தனள் வழங்கலும், நேரிழைச் சண்டிலி நிமிர்ந்தெழும் அவாவினள் | |
| காய்பசி வருத்தக் கடுந்துயர் உழந்தோன் | 75 |
| வாய்புகும் உணவினை மகிழ்ந்துண விரையும் ஆர்வலன் என்ன ஆஅர மாந்தினள் சோர்விலள் வைகலும் சொல்லிசை பயின்றனள்; | |
| | |
| பூங்கொடி பாராட்டல் | |
| | |
| தமிழிசை பயிலும் தணியா வேட்கையள் | |
| தமிழக மாந்தரும் தம்முள் வியக்க | 80 |
| முன்னணி எய்திய மொய்குழல் மொய்ம்பினை முன்னின் றுணர்ந்த மென்னடைப் பூங்கொடி `நின்குரல் மென்குரல் நன்குரல் ஆதலின் மென்மொழி இசைக்கு மெருகுறல் கண்டேன்; | |
| பண்ணிசைப் பயிற்சியில் பகரரு முயற்சியும் | 85 |
| திண்ணிய நெஞ்சும் திரிபிலா வேட்கையும் நண்ணினை யாதலின் நலமுயர் தோழி, எண்ணிய எண்ணியாங் கெய்தினை வாழி! | |
| | |
| சண்டிலி வரலாறு | |
| | |
| ஒன்றுனை வேண்டுவல், உன்வர லாற்றினை | |
| இன்றுணர் விழைவினென் என்பால் உரைத்திடல் | 90 |
| நன்றெனின் நவிலுதி' என்னலும் நங்கை தூமென் கொடியைத் தொழுதனள் உரைக்கும், `கோமகள் நினக்குக் கூறுதல் என்கடன்; விந்தங் கடந்தொரு வியனகர் உண்டு | |
--------------------------------------------------------------- |
| காய்பசி - கொடும்பசி, ஆஅர - நிறைய, மொய்குழல் - சண்டிலி, மொய்ம்பினை - திறத்தை, பகரரு - கூற இயலாத. | |
| | |