பக்கம் எண் :

இசைப்பணி புரிந்த காதைபக்கம் : 131

 

அருவிக் காட்சி - புலியருவி

 
 
  போர்ப்பறை சாற்றிடும் ஆர்ப்பொலி என்ன
வேர்க்குலம் பேர்த்து வீறுற் றார்த்துக்
கல்பொரு திறங்கும் மல்லலம் அருவிகள்
நல்லன பலவும் நயந்தினி தாடினேன்;

 
  கண்டார் வியந்திடக் கைபுனைந் தியற்றிய 125
  தண்டாது பாயும் தண்புலி யருவியில்
கொண்டான் தன்னொடுங் கூடி யாடினேன்;
 
     
 

பேரருவி

 
     
  பொங்குமா கடலெனப் பொங்கிட வீழ்ந்து
தங்கா திழிதரும் விரிபே ரருவியில்
 
  கங்குலும் பகலும் கணவனும் யானும் 130
  ஆடியும் ஓடியும் ஆர்த்தும் நகைத்தும்
பாடியும் கூடியும் பன்முறை ஆடினோம்;
 
     
 

சண்பக அருவி

 
     
  தண்முகை அவிழும் சண்பக அடவி
எண்ணரும் மலர்களை இறைத்திட வாரித்
 
  தடதட ஒலியொடு தாவி இறங்கிப் 135
  படர்தரு சண்பக அருவிப் பாங்கரில்
நின்றும் இருந்தும் நிலவிய இன்பில்
ஒன்றிய உளத்தேம் உலகினை மறந்தோம்;
 
     
 

தேனருவி

 
     
  வான முகட்டின் வாய்திறந் திறங்குதல்  
  மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின் 140
  ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும்
பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;
 

---------------------------------------------------------------

  மல்லல் - வளப்பம், தண்டாது - இடைவிடாது, கங்குல் - இரவு, மான - போல, ஒய்ய்யெனும் - ஒலிக்குறிப்பு, எருத்து - கழுத்து.