|
| துங்கநீ ராடித் துணையுடன் கூடிக் குறும்பலா வடியில் இருந்தனென்; ஆங்கண் | |
| செங்கதிர் மேலைத் திசையினில் மறைய | 170 |
| மாலைக் காதலன், மண்மகள் போர்த்த சீலை யாகிய செழுமிள நாற்றினை வாலைக் குறும்பென வளரிளந் தென்றற் கைகொடு வருடி அலைத்திடல் கண்டும், | |
| கடுவனும் மந்தியும் கனிவகை கொடுத்துத் | 175 |
| தொடுவதும் விடுவதும் தொடர்ந்துடன் ஓடிக் கிளைதொறும் தாவித் திரிவது கண்டும், மென்சிற கொலியால் வீணையின் இசைத்து நன்மணம் பரப்பும் பன்னிற மலர்தொறும் | |
| நறவம் மாந்திடும் வண்டினம் கண்டும், | 180 |
| பறந்தும் இருந்தும் பாடும் புள்ளினம் விருந்தெனச் செவிவழிக் கிருந்தன கண்டும், நகைத்துரை யாடிக் களித்தவண் இருக்கத் | |
| | |
| நிலவுக் காட்சி | |
| | |
| தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில் | |
| வெண்மதி வட்டம் விட்டொளி கான்று | 185 |
| தண்புனல் கானம் தளிர்கொடியாவும் வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம்; அள்ளிய விழியால் ஆர வுண்டனம் உள்ளந் துள்ளிய உவகைப் பாங்கினைத் | |
| தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி! | 190 |
| | |
| பாட்டின் மகிழ்ச்சி | |
| | |
| உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால் | |
--------------------------------------------------------------- |
| வாலை - இளமை, நறவம் - தேன், மாந்திடும் - பருகும், புள்ளினம் - பறவைகள், கானம் - காடு. | |
| | |