பக்கம் எண் :

பக்கம் :134பூங்கொடி

 
 
  பைந்தொடீ! முன்பே பாடுந் திறனும்
இயைந்துளேன் ஆதலின் வாய்விட் டிசைத்தேன்;
மயங்கிய துணைவன் வாயிசை கேட்டு
 
  வியந்துரை கூறி நயந்தனன் ஆக 195
  எற்புகழ்ந் துரைத்த இசைமைத் திறலால்
முற்படு செருக்குள் மூழ்கி இருந்தேன்;
 
     
 

இசையொலி கேட்டல்

 
     
  யாழொலி யோவென யாண்டிருந் தோஒரு
மெல்லிசை நல்லிசை மெல்லென வந்தது;
 
  மெல்லிய அவ்விசை மென்கால் தன்னொடு 200
  மிதந்து படர்ந்தென் செவியகம் புகுந்தது;
புகுந்தஅவ் விசையாற் புலமெலாம் ஒன்றாய்ச்
சொக்கிய விழியும் சோர்வுறும் மொழியும்
உடையே னாகி உணர்வு தளர்ந்திடும்
 
  நடையே னாகி நல்லிசை வருதிசை 205
  மருங்கினை நாடி நெருங்கினேன்; ஆங்கண்  
     
 

இசையணங்கு

 
   
  மருங்குல் கொடியாய் மதியம் முகமாய்க்
கருங்கண் குவளையாய்க் காட்டும் ஒருமகள்
இனிய காட்சியள் இசைமழை பொழிந்து
 
  தனிய ளாகித் தனைமறந் திருந்தனன்; 210
  செவியுள் இசையும் சேலிரு விழியுள்
அவளின் உருவும் அகத்துள் மகிழ்வும்
நிறைந்திடப் பெற்றேன் நின்றேன் அவள்முன்;
அகமும் முகமும் அருள்நிறை விழியும்
 
  உகந்தும் மலர்ந்தும் உற்றெனை நோக்கி 215
  வருக வருகென வாய்மலர்ந் தருளினள்;  

---------------------------------------------------------------

  மென்கால் - மெல்லிய காற்று, புலமெலாம் - ஐம்புலன்கள், மருங்குல் - இடை.