|
| தூயவள் தன்னைத் தொழுதவண் இருந்து தோயும் நின்னிசை தாயே ஈங்கெனை ஈர்த்த தெனநான் இயம்பலும், இன்னிசை | |
| வார்த்தனள் மீண்டும்; மகிழ்ந்திசை பருகி | 220 |
| | |
| சண்டிலி புகழ்ந்து வேண்டல் | |
| | |
| `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப | |
| வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல் | 225 |
| இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்; என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்? இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்' | |
| எனநான் பணிவுடன் இயம்பினே னாக, | 230 |
| அனநடை புன்னகை அரும்பினள் இயம்பும்; | |
| | |
| தமிழிசைச் சிறப்பு | |
| | |
| `மனமொழி செயலினை வயப்படச் செய்யும் தனியொரு செயற்றிறம் தமிழிசைக் குண்டு; கொடுந்தொழில் விலங்கும் கடுவிட அரவும் | |
| படிந்திடச் செய்யும் பாங்கிதற் குண்டு; | 235 |
| மூவாத் தமிழில் மொழியிசை வளர்க்கும் தேவா ரப்பண் தெரிந்தொன் றிசைத்தேன் அவ்விசை கேட்டுளம் அதனுட் கூட்டினை! செவ்விய அந்நூல் திறமெடுத் துரைப்பின் | |
| மாசில் வீணையும் மாலை மதியமும் | 240 |
| வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே' என்றுளம் அன்பால் இளகிட மொழிந்தனள்; | |
--------------------------------------------------------------- |
| ஈர்த்தது - இழுத்தது, பதம் - சமயம், அனநடை - அன்ன நடை. | |
| | |