பக்கம் எண் :

பக்கம் :136பூங்கொடி

 
 

சண்டிலியை ஆற்றுப் படுத்தல்

 
 
  நன்றுரை கேட்டு நயந்துளம் மகிழ்ந்தே
 
  `உன்மொழி யிசைஎனக் கோதுதி யோ?'என 245
  `என்னால் இயம்புதல் இயல்வதொன் றன்று
மின்னோர் இடையாய் மேம்படு செல்வர்
தக்கார் அறவோர் தகுகலை யறிவின்
மிக்கார் பலரும் தொக்குடன் வாழும்
 
  மணிநகர் என்னும் அணிநகர் உளது 250
  பணிபுரி தொழிலே அணியெனப் பூண்டுள
மலையுறை யடிகள் நிலைபெற நிறுவிய
கலையகம் அந்நகர்க் கண்ணதுஅப் பள்ளியில்
இசைக்கே இசைதரும் பெற்றியள் எமதுதென்
 
  திசைக்கே விளக்கந் திகழ்ந்திடத் திகழ்பவள் 255
  இளங்கொடி பூங்கொடி எனுந்திரு வாட்டி
உளங்கொள இசையை ஓதும் பணியினள்
அவளுழைச் செல்கநின் ஆவல் நிறைவுறும்'
என்றெனைப் பணிக்க ஈங்கிவண் வந்தேன்;
 
     
 

சண்டிலியின் துணிந்துரை

 
     
  தணியா வேட்கை தணித்தனை! செல்விநின் 260
  பணியால் தமிழிசை பாருல கெங்கும்
இணையிதற் கிலையென ஏற்றமுற் றோங்கும்
துணிவோ டிதனைச் சொல்லுதல் வல்லேன்
சிறியவள் எனக்குச் செந்தமி ழிசைபால்
 
  முறுகிய ஆவலின் முழுதுணர்ந் தனனால்; 265
     
 

சண்டிலியின் அழைப்பு

 
     
  பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன்
பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன்
விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை
 

---------------------------------------------------------------

  தொக்கு - சேர்ந்து, வரூஉம் - வருவான்.