|
| ஊட்டிய தவைவீ! ஒன்றுனை வேண்டுவல் | |
| பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட | 270 |
| நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன் அந்நகர்க் கேகுதல் | |
| புரிகுவை யாயின் பெரும்பயன் வரும்'எனப் | 275 |
| பரிவுடன் சண்டிலி பகர்ந்து வணங்கினள்; | |
| | |
| வேங்கை நகரில் பூங்கொடி | |
| | |
| சரியென இசைந்தெழு தன்னிகர் பூங்கொடி அடிகள் திருவடி அன்பொடு வணங்கித் துடியிடைச் சண்டிலி துணையொடு போந்தவள் | |
| ஓங்ககல் நெடுந்தெரு வேங்கைமா நகருள் | 280 |
| நிலவொளி வீசும் நெடுநிலை மாடம் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் மாளிகை புகுந்து மகிழ்வுடன் தங்கி மீளி மீனவன் மீட்டநற் சுவடியின் | |
| துணையொடு தோன்றித் தொழுதவண் இருந்தே | 285 |
| இணையிலா வளத்தன் இளகிய மனத்தன் பசிதின வருந்திய பைதன் மாக்கட்கு நசையொடு பொருஞ்சோறு நல்குதல் என்ன இசைபயில் பசியால் இரப்போர் தமக்கெலாம் | |
| காரிகை உவந்த கனியிசை யமுதம் | 290 |
| வாரி வாரி வழங்கினள் பெரிதே | 291 |
--------------------------------------------------------------- |
| ஓங்ககல் - நீண்டகன்ற, பகுவாய் - பெரியவாயில், மீளி - சிறந்தவன், பைதல் - வருத்தம். | |
| | |